என் மலர்
செய்திகள்

மழை நீரில் மூழ்கி மாணவன் பலி: பள்ளி முதல்வர் - ஆசிரியர் கைது
மழை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானது தொடர்பாக பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியரை மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பை அருகே உள்ள காவனூர் காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சபரீஷ் (வயது 6). வடமேல் பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் ஆண்டு படித்து வந்தான்.
பள்ளி வளாகத்தில் குப்பை கொட்டுவதற்காக 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையினால் பள்ளம் முழுவதும் மழை நீரால் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை விளையாட்டு நேரத்தில் சபரீஷ் உள்பட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடினர். அப்போது சபரீஷ் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்தான்.
ஆசிரியர்கள் அவனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் சபரீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
ஆனால் அங்கு பள்ளி நிர்வாகத்தினர் யாரும் இல்லை. ஆத்திரம் அடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் மாணவன் பலியானது தொடர்பாக பள்ளி முதல்வர் ராபர்ட், உடற்கல்வி ஆசிரியர் அசோக்குமார் ஆகிய 2 பேரையும் மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story