என் மலர்
செய்திகள்

சென்னை-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்
சென்னை-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06007) இன்று (சனிக்கிழமை) இரவு 9.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
மறுமார்க்கமாக வருகிற 3-ந் தேதி மாலை 6.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06008) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
மேலும், வருகிற 7, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06001) மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
மறுமார்க்கமாக 6, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06002) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சுவிதா சிறப்பு ரெயில் (82602) வருகிற 9-ந் தேதி மதியம் 2.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 எழும்பூரை வந்தடையும்.
கோவை-ஜபால்பூர் இடையே சிறப்பு கட்டண ரெயில் (02197) வருகிற 10, 17, 24, 31-ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7, 14, 21, 28-ந் தேதிகளில் மற்றும் செப்டம்பர் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) கோவையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மதியம் 12.45 மணிக்கு ஜபால்பூரை சென்றடையும்.
புதுவை-சந்திரகாச்சி இடையே சிறப்பு கட்டண ரெயில் (06010) இன்று(சனிக்கிழமை), வருகிற 8, 15, 22, 29-ந் தேதிகள், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5, 12, 19, 26-ந் தேதிகள் மற்றும் செப்டம்பர் மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) புதுவையில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக திங்கட் கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும்.
சென்னை சென்டிரல்-லோக்மான்ய திலக் இடையே சிறப்பு கட்டண ரெயில் (06080) இன்று(சனிக்கிழமை) மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு லோக்மான்ய திலக் சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story