என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இந்து மக்கள் கட்சியினர் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டும் திட்டத்தை வரவேற்கிறேன்: அர்ஜூன் சம்பத்
By
மாலை மலர்20 Jun 2017 11:10 AM GMT (Updated: 20 Jun 2017 11:10 AM GMT)

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை வரவேற்பதாக வேலூரில் இந்து மக்கள் கட்சியினர் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கணியம்பாடி கிராமத்தில் வேலூர்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையோரம் புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. அப்பகுதி மக்கள் தினந்தோறும் வழிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வேலூர்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, கணியம்பாடியில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலை இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகவலையறிந்த, இந்து மக்கள் கட்சியினர் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் இன்று புற்று மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்க கூடாது என்றுக்கூறி வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து கொள்ளையடித்து வருகிறது. லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனை மாற்றி அமைக்க ரஜினி அரசியலுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட ரஜினி தனிக்கட்சி தொடங்குவதற்கான திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வரும் திட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கிறது.
ஆனால், இந்து மக்கள் கட்சி எதிர்க்கவில்லை. ஆந்திர அரசின் அணைக்கட்டும் திட்டத்தை வரவேற்கிறேன். அணைக்கட்டுவதால் நீர்வளம் அதிகரிக்கும். இதேபோல் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×