என் மலர்
செய்திகள்

பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு 7 வருடம் சிறை தண்டனை
பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி தலைமையாசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தெற்கு ராயப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியையாக வீராச்சாமி என்பவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 37) பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் தலைமையாசிரியராக மதிவாணன் (47) பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் புவனேஸ்வரிக்கு , மதிவாணன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, மனமுடைந்த புவனேஸ்வரி கடந்த 7-2-2015 ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லியாகத் அலி இன்று தீர்ப்பு அளித்தார்.
அதில் தலைமையாசிரியர் மதிவாணனுக்கு, 354(2ஏ) பெண்ணை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியது என்ற பிரிவின் கீழ் 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதே போல் 4பி(2) பெண்வதை தடுப்பு சட்டம் என்ற மற்றொரு பிரிவின் கீழ் 5 வருட சிறை தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.
பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை செய்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story