என் மலர்
டென்னிஸ்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா முதல் செட்டை 7-6 (7-4) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அனிசிமோவா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, சபலென்காவுடன் மோதுகிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை7-6 (7-2) என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட பிரிட்டன் ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நமப்ர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார்.
லஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்து அதிரடியாக ஆடினார்.
இதனால் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அபார வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம்-குரேஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்பரி ஜோடி 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் இத்தாலியின் சின்னர் கனடாவின் பெலிக்ஸ் ஆகரை சந்திக்கிறார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஒசாகா அமெரிக்காவின் அனிசிமோவாவை சந்திக்கிறார்.
- ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.
- அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச் அரைறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் விளையாடிய இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டுகளித்தார்.
ஒரே சீசனில் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்ததை கண்டு தோனி மகிழ்ச்சிடைந்தார்.
- அமெரிக்க வீரர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மகள் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தல் ஆட்டம் போட்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.
முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் விளையாடிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை முடிவடைந்தது. ஜோகோவிச்சின் மகள் தாராவின் பிறந்த நாள் இன்று. மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றி பெற்ற கையோடு டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடினார். இது அங்கிருந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- 14ஆம் தரவரிசையில் உள்ள பாம்ப்ரி ஜோடி, 4ஆம் தரவரிசையில் உள்ள ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது.
- ஜெர்மனி ஜோடி கடந்த வருடம் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
14ஆம் தரநிலை ஜோடியான பாம்ப்ரி- வீனஸ், தரநிலையில் 4ஆம் நிலை ஜோடியான ஜெர்மனியின் டிம் புட்ஸ்- கெவின் கிராவிட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி ஜோடி கடந்த அமெரிக்க ஓபனில் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
காலிறுதியில் நிகோலா மெக்டிக் (குரோசியா) - ராஜீ ராம் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.
- அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீரரான அல்காரஸ், 10 நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.
இந்திய நேரப்படி சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் இருந்து வோண்ட்ரோசோவா விலகியதால் முதல் தரநிலை வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெகுலா- சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
- அமெரிக்க ஓபன் ஜூனியர் போட்டிகள் அமெரிக்காவில் ஆகஸ்ட் 31-ந் தேதி முதல் செப்டம்பர் 7 வரை நடக்கின்றன.
- இந்தியா சார்பாக தமிழகத்தை சேர்ந்த 16 வயதான மாயா ராஜேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார்.
அமெரிக்க ஓபன் ஜூனியர் போட்டிகள் அமெரிக்காவில் ஆகஸ்ட் 31-ந் தேதி முதல் செப்டம்பர் 7 வரை நடக்கின்றன. இந்தியா சார்பாக தமிழகத்தை சேர்ந்த 16 வயதான மாயா ராஜேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார்.
இந்த தொடரின் பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி, சீனாவின் ஜாங்-கியான் வெய்யுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 7-6 (7-5), 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு மாயா ராஜேஷ்வரன் முன்னேறினார். இவர் இரண்டாவது சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஐக்கிய இராச்சியத்தின் ஹன்னா க்ளக்மேனை எதிர்கொள்கிறார்.
நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக வளர்ந்து வரும் மாயா, பிப்ரவரியில் நடந்த மும்பை ஓபன் 2025 WTA 125 போட்டியின் அரையிறுதிக்கு முன்னேற பல மூத்த வீரர்களை வீழ்த்தினார்.
- சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் கஜகஸ்தானை சேர்ந்த 23-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர் கொண்டார்.
இதில் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 21 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 8-வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாவுர் ( ஆஸ்திரேலியா), 10-ம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி ( இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.
15-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார். கனடாவை சேர்ந்த 25-ம் நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 7-5, 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை சந்தித்தார். இதில் ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 4 நிமிட நேரமே தேவைப்பட்டது.
பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், 3-வது வரிசையில் உள்ள வருமான கோகோ கவூப் ( அமெரிக்கா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். 23-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான் ) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான கவூப்பை வீழ்த்தினார்.
8-ம் நிலை வீராங்கனை அமண்டா அனிஸ்மோவாவும் ( அமெரிக்கா) கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் ஸ்வியாடெக்குடன் மோதுகிறார்.
- சிறுவனுக்கு வீரர் வழங்கிய தொப்பியை பறித்த சிஇஓ.
- சமூக வலைத்தளத்தில் விமர்சன கருத்துகள் எழுந்ததால் வினோத விளக்கம்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் போலந்து நாட்டைச் சேர்ந்த கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் விளையாடிய ஆட்டத்தை, போலந்து நாட்டின் ட்ரோக்ப்ருக் நிறுவனத்தின் சிஇஓ பியோட்ர் ஸ்செரேக் உள்பட பலர் பார்த்து ரசித்தனர்.
போட்டியில் கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் வெற்றி பெற்றதும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கினார். அப்போது தான் அணிந்திருந்த தொப்பியில் சிறுவன் ஒருவனுக்கு வீரர் தன்னுடைய கையெழுத்திட்டு வழங்குவார். சிறுவன் தொப்பியை பெறுவதற்குள் அருகில் நிற்கும் ஸ்செரேக் அதை பறித்து விடுவார். அத்துடன், அருகில் இருக்கும் தன்னுடைய பார்ட்னரின் பையில் வைத்து விடுவார்.
அந்த சிறுவன் ஏக்கத்துடன் தொப்பி பறிபோனதை பார்ப்பான். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஒரு நிறுவனத்தின் சிஇஓ இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? என நெட்டிசன்கன் அவரை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர்.
இந்த நிலையில் ஸ்செரேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தொபியை வைத்து உலகளாவிய மோசடியை உருவாக்க வேண்டாம். ஆட்சேபைனக்குரிய வகையில் கருத்து பதிவிட்டவர்கள் மீது வழக்கு தொடுப்பேன்" எனக் கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.






