என் மலர்
விளையாட்டு

புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி
- மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
- மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.
மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






