என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அவர்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை... ரோகித் - கோலிக்கு ஆதரவாக சுனில் ஷெட்டி பதிவு
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்
- விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர்.
இந்த ஒருநாள் தொடர் தான் ரோகித் - கோலியின் கடைசி தொடராக இருக்கும் என்று அவர்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், கடைசி போட்டியில் அந்த விமர்சனங்களை இருவரும் அடித்து துக்குநூறாக உடைத்துவிட்டனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகரும் கே.எல்.ராகுலின் மாமனாருமான் சுனில் ஷெட்டி, விராட் கோழி - ரோகித் சர்மாவை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், சாதனைகள், போராட்டங்கள், பெருமை, கண்ணீர், தியாகம் என அனைத்தையும் நாம் எவ்வளவு விரைவாக மறந்துவிடுகிறோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
இரண்டே போட்டிகள் , திடீரென்று எல்லோரும் விமர்சகர்களாகி விடுகிறார்கள்.
அவர்கள் கூச்சலை கேட்டார்கள். சந்தேகங்களைப் படித்தார்கள். ஆனாலும் அவர்கள் அமைதியாக இருந்தார்கள்... ஆனால் அவர்களது பேட்டை பேச வைத்தார்கள்.
ஏனென்றால் ரோஹித் & விராட் போன்ற ஜாம்பவான்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.






