என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கும் ரோகித்- கோலி
- மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார்.
- ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி ஒருநாள் தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடர் பிளேட், எலைட் என்ற இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிளேட் பிரிவில் மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், பீகார், மணீப்பூர், நாகலாந்து இடம் பெற்றுள்ளது.
எலைட் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ரெயில்வேஸ், ஒடிசா, சவுராஸ்ட்ரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சண்டிகர், கோவா, ஹிமாசல் பிரதேசம், உத்திரகாண்ட், மும்பை, சிக்கீம், பெங்கால், விதர்பா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, திரிபுரா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், அசாம், பரோடா, ஐதராபாத், உத்தர பிரதேசம் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர். அதன்படி மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
இவர்கள் இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர் பார்ப்பு உள்ளது.






