என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    U19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
    X

    U19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

    • டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 411 ரன்கள் குவித்தது.
    • சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், U 19 உலகக் கோப்பையை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். இந்தத் தொடர் முழுவதும் நமது வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி, திறமையை வெளிப்படுத்திய வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×