என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார்: ரோகித் சர்மா
- தற்போதைய சூழ்நிலையில் கே.எல். ராகுல் தொடக்க வீரரான களம் இறங்குவார்.
- முதல் போட்டியில் மிகவும் அற்புதமாக கே.எல். ராகுல் பேட்டிங் செய்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால் ஜெய்ஸ்வால் உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. 2-வது இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் அடித்து அசத்தியது.
இதற்கிடையே நாளை தொடங்க இருக்கும் 2-வது போட்டியில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதனால் ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்ற கேள்வி எழுந்தது.
பெர்த்தில் சிறப்பாக விளையாடியதால் ஜெய்ஸ்வால் உடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரோகித் சர்மா கூறுகையில் "கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். நான் மிடில் ஆர்டரில் ஏதாவது ஒரு இடத்தில் களம் இறங்குவேன். நான் எப்படி அந்த முடிவுக்கு வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். பேட்டிங்கில் கீழ் வரிசையில் இறங்குவது தெளிவாக இருக்கிறது. நாங்கள் முடிவை விரும்புகிறோம். நாங்கள் வெற்றியை விரும்புகிறோம் என்பது உங்களுக்கு தெரியும்.
ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியது. நான் எனது மகனை (அஹான்) கையில் ஏந்தியவாறு கே.எல். ராகுல் பேட்டிங் செய்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். கே.எல். ராகுலை தொந்தரவு செய்ய விருமப்விலிலை. இந்த முடிவு தற்போதுள்ள சூழ்நிலை அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த விசயம் எதிர்காலத்தில் மாறுபடுமா? என்பது குறித்து எனக்குத் தெரியாது.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.






