என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: விக்னேஷ் புத்தூருக்கு நோ பால் கொடுக்காமல் ஸ்டார்க்-க்கு மட்டும் கொடுத்தது ஏன்?
- ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார்.
- நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஸ்டார்க்கின் அசத்தலான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரின் நான்காவது பந்தை வீசும்போது ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார். நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.
மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கூட வைட் லைனில் பின்கால் வைத்து தான் பந்துவீசினார், ஆனால் அவருக்கு நோ பால் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், புத்தூர் விதிகளுக்கு உட்பட்டு தான் பந்துவீசியுள்ளார் என்று நடுவர் அணில் சவுத்ரி விளக்கம் அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில், புத்தூர் தனது பின்னங்காலை வைட் லைனில் வைத்தார். ஆனால் பந்து வீசுவதற்கு முன்னாள் வைட் லைனில் இருந்து காலை தூக்கி விட்டார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு தான் அவர் பந்துவீசினார் என்று நடுவர் அணில் சவுத்ரி தெரிவித்தார்.






