VIDEO | IPL 2026 தொடருக்கான தீவிர பயிற்சியில் விராட் கோலி

முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார்
VIDEO | IPL 2026 தொடருக்கான தீவிர பயிற்சியில் விராட் கோலி
Published on

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com