என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    தோனிக்காக விதியை மாற்றியது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆபத்து.. சுனில் கவாஸ்கர் விமர்சனம்
    X

    தோனிக்காக விதியை மாற்றியது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆபத்து.. சுனில் கவாஸ்கர் விமர்சனம்

    • தோனிக்கு இடம் அளிப்பதற்காக கடந்த ஏலத்திற்கு முன் வரம்பு 4 கோடியாக உயர்த்தப்பட்டது.
    • கடந்தக் காலங்களில் அன்கேப்ட் பிளேயர் பெரியத் தொகைக்கு வாங்கப்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்ததாக எனக்கு நினைவில்லை.

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 9 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக காயமடைந்த ருதுராஜ்க்கு பதிலாக மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையிலும் சென்னை அணி எந்த மாற்றத்தையும் சந்திக்காமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திற்கு முன்பாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ரூபாய் 4 கோடி ரூபாய்க்கு அன்ட் கேப்டு வீரராக தக்க வைத்தது. இந்த சூழ்நிலையில் இதனால் ஏற்படும் சிக்கல் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இளம் இந்திய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமலேயே பெரிய தொகைக்கு வாங்கப்பட்டால் அவர்களது வெற்றிக்கானப் பசி மற்றும் உந்துதல் தணிந்து மங்கி விடுவார்கள். ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை அது பொருட்டல்ல. ஏனெனில் அதை அவர்கள் நல்ல ஆட்டம் என்று உணரலாம். ஆனால் இளம் வயதிலேயே பெரியத் தொகைக்கு வாங்கப்படும் இந்திய வீரர்கள் வெற்றி பெறாவிட்டால் அது இந்திய கிரிக்கெட்டை கொஞ்சம் தோற்கடிக்கும்.

    மகேந்திர சிங் தோனிக்கு இடம் அளிப்பதற்காக கடந்த ஏலத்திற்கு முன் வரம்பு 4 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்தக் காலங்களில் அன்கேப்ட் பிளேயர் பெரியத் தொகைக்கு வாங்கப்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்ததாக எனக்கு நினைவில்லை. ஒருவேளை அடுத்த சில வருடங்களில் அது மாறலாம். இருப்பினும் அது போன்ற வீரர்களின் சம்பளம் அடுத்த ஏலத்தில் குறைந்தால் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் அழுத்தத்தை குறைக்கும். அது அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கு உதவும். இதனால் அன் கேப்டு வீரர் தொகையை குறைக்க வேண்டும்

    என்று கவாஸ்கர் கூறினார்.

    Next Story
    ×