என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

எம்.எஸ். தோனி ஓய்வு?: தீயாய் பரவிய தகவல்களுக்கு ஸ்டீபன் பிளமிங் அளித்த பதில்..!
- சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் பார்த்தனர்.
- முதன்முறையாக சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்ததால் எம்.எஸ். தோனி ஓய்வை முடிவை அறிவிக்கலாம் எனத் தகவல் பரவியது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் கண்டுகளித்தனர். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, இன்று முதன்முறையாக அவரது பெற்றோர்கள் போட்டியை பார்க்க வந்தனர்.
ஒருவேளை எம்.எஸ். தோனி இன்று ஓய்வு குறித்த முடிவை அறிவிக்கலாம். இதனால்தான் பெற்றோர்கள் அவரது கடைசி போட்டியை பார்க்க வந்துள்ளனர் எனச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. ஆனால் எம்.எஸ். தோனி ஓய்வு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஆலோசகர் ஸ்டீபன் பிளமிங் இது தொடர்பாக கூறுகையில் "எம்.எஸ். டோனி இன்னும் வலிமையாக சென்று கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எம்.எஸ். தோனியிடம் அவருடைய எதிர்காலம் குறித்து கேட்பதில்லை" என்றார்.
இதனால் எம்.எஸ். தோனி இந்த தொடர் முழுவதும் விளையாடுவார். டெல்லிக்கு எதிராக இன்று கடைசி வரை களத்தில் நின்று 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார்.






