என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: மும்பைக்கு எதிராக குஜராத் பந்து வீச்சு தேர்வு
- நடப்பு தொடரில் மும்பையில் நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது.
- புள்ளிப்பட்டியலில் மும்பை 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






