என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஜித்தேஷ் அவுட் ஆன போது அவருக்கு பிடித்த பாடலான தோசை, இட்லி பாடலை போட்டு கிண்டலடித்த DJ
    X

    ஜித்தேஷ் அவுட் ஆன போது அவருக்கு பிடித்த பாடலான தோசை, இட்லி பாடலை போட்டு கிண்டலடித்த DJ

    • சென்னை அணிக்கு எதிராக ஜித்தேஷ் 12 ரன்கள் எடுத்தார்.
    • சென்னை என்றவுடன் தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் தான் நினைவுக்கு வரும் என போட்டிக்கு முன்னர் ஜித்தேஷ் கூறினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது களத்தில் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆகி வெளியே செல்லும் போது தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் ஒலித்தது. இதனை கேட்டதும் ரசிகர்கள் ஆர்பரித்து அவரை கிண்டலடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ஆர்சிபி எடுத்த வீடியோவில் சென்னை என்றால் உங்களுக்கு நியாபகம் வருவது என்ன என்று கேள்வி எழுப்பிய போது இந்த பாடல் தான் எனக்கு நியாபகம் வரும் என ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார்.

    அதனால் தான் அவர் அவுட் ஆகி வரும் போது டிஜே இந்த பாடலை ஒலித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×