search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கேப்டன்களை அதிகம் கொண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் விவரம்
    X

    கேப்டன்களை அதிகம் கொண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் விவரம்

    • ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர்.
    • கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்-ஐ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதுபோக மிட்செல் மார்ஷ், மார்க்கிராம், டேவிட் மில்லர் போன்ற வீரர்களையும் எடுத்துள்ளது.

    இந்த அணியில் ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர். இதனால் கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே தெரிவித்துள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளது. அத்துடன் வெஸ்ட் இண்டீசின் ஷமர் ஜோசப் உள்ளார். மிட்செல் மார்ஷும் இருக்கிறார். இவர்கள் பந்து வீச்சில் எப்படி ஆதிக்கம் செலுத்த இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பேட்டிங்கில் தொடக்க வீரர்களை களம் இறக்குவதில் லக்னோவிற்கு சவால் இருக்கும். மிடில் ஆர்டர்களில் பண்ட், பூரன், மார்க்கிராம், ஆயுஷ் படோனி உள்ளிட்டோர் உள்ளனர்.

    24 பேர் கொண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-

    1. நிக்கோலஸ் பூரன் (வெளிநாட்டு வீரர்), 2. ரவி பிஷ்னோய், 3. மயங்க் யாதவ், 4. மொஹ்சின் கான், 5. ஆயுஷ் படோனி, 6. ரிஷப் பண்ட், 7. டேவிட் மில்லர் (வெளிநாட்டு வீரர்), 8. எய்டன் மார்க்கிராம் (வெளிநாட்டு வீரர்), 9. மிட்செல் மார்ஷ் (வெளிநாட்டு வீரர்), 10. ஆவேஷ் கான், 11. அப்துல் சமத், 12. ஆர்யன் ஜூயல், 13. ஆகாஷ் தீப், 14. ஹிம்மத் சிங், 15. எம். சித்தார்த், 16. திக்வேஷ் சிங், 17. ஷாபாஸ் அகமது, 18. ஆகாஷ் சிங், 19. ஷமர் ஜோசப் (வெளிநாட்டு வீரர்), 20. பிரின்ஸ் யாதவ், 21. யுவராஜ் சவுத்ரி, 22. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், 23. அர்ஷின் குல்கர்னி, 24. மேத்யூ பிரீட்ஸ்கே (வெளிநாட்டு வீரர்).

    Next Story
    ×