என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா... அரைசதம் கடந்து தொடரும் கோலி!
- நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
- 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் உள்ளன. இந்நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வருகிறது. 11 ரன்களில் ரோஹித் ஷர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்தியா. மறுபக்கம் கோலி அவுட் ஆகாமல் விளையாடி வரும் நிலையில் அவருக்கு துணையாக நிதிஷ் குமார் களமிறங்கினார். ஆனால் 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார். ஆனால் விராட் கோலி அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது ஜடேஜா களமிறங்கியுள்ளார்.
இந்த இணையாவது அணியை தொடர்ந்து வெற்றிப் பக்கத்திற்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






