என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: அன்று ரோகித்.. இன்று ஜெய்ஸ்வால்.. ரன் அவுட் குறித்து கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
    X

    வீடியோ: அன்று ரோகித்.. இன்று ஜெய்ஸ்வால்.. ரன் அவுட் குறித்து கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

    • ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆவது போல ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவும் ரன் அவுட் ஆவார்.
    • ரோகித் சர்மா ரன் அவுட் ஆகும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது.

    ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    இதேபோல ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே இதுபோன்ற ஒரு ரன் அவுட் ஆகும். அதில் எதிர் திசையில் கில்தான் இருப்பார். ரோகித் சர்மா பந்து அடித்து விட்டு வா என கூறி ஓடி வருவார். ஆனால் கில் அதனை கவனிக்காமல் பந்து செல்லும் திசையை பார்த்து அப்படியே நின்று விடுவார். அதற்குள் ரோகித் எதிர் திசைக்கே வந்து ரன் அவுட் முறையில் வெளியேறுவார்.

    அதே போல் இந்த முறையும் ஜெய்ஸ்வாலின் கால் என்ன என்பதை கவனிக்காமல் பந்து எங்கு செல்கிறது என்பதை பார்த்து கொண்டிருப்பார். இதனை வைத்து ரசிகர்கள் பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    ஸ்டைக்கர் கால் செய்த பிறகு நான் ஸ்டைக்கரில் இருக்கும் வீரர் அவரைதான் பார்க்க வேண்டும் அவருடைய கால் என்ன சொல்கிறார்கள் என கவனிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படி பார்த்தால் கில் செய்வது தவறு என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகிய இருவரின் ரன் அவுட் விஷயத்தில் கில் செய்தது தவறு என்றும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பதில் கில்லுக்கு விருப்பம் இல்லை எனவும் ஒரு தரப்பு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ரோகித் சர்மா சம்பவத்தில் கில் மீது தான் தவறு இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜெய்ஸ்வால் ரன் அவுட்டில் இருவரின் மீதும் தவறு இருப்பதாக நடுநிலையில் இருக்கும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×