search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா
    X
    5 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா

    கொல்கத்தா டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு - வங்காளதேசம் 106 ரன்னில் சுருண்டது

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வங்காளதேசம் அணி 106 ரன்னில் சுருண்டது.
    கொல்கத்தா:

    இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷத்மாம் இஸ்லாம், இம்ருல் கயேஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    இஸ்லாம் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.

    இதையடுத்து, வங்காளதேசம் அணி உணவு இடைவேளை வரை 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. உணவு இடைவேளையை தொடர்ந்து, வங்காளதேசம் அணி களமிறங்கியது.

    ஷமியும், இஷாந்த் சர்மாவும் அதிரடியாக பந்து வீச்சை தொடர்ந்தனர். இதனால் வங்காளதேசம் அணி 30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லிட்டன் தாஸ் 24 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.

    இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×