search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த முறையை விட தற்போது மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது: விராட் கோலி
    X

    கடந்த முறையை விட தற்போது மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது: விராட் கோலி

    கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போதைய மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் கிடைத்தன. மெல்போர்ன் ஆடுகளம் கடந்த சில வருடங்களாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும், போட்டிகளில் முடிவு கிடைக்காமல் ‘டிரா’விலேயே முடிந்துள்ளன.

    இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு மெல்போர்னில் விளையாடியபோது, உயிரோட்டமில்லாத ஆடுகளமாக இருந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 192 ரன்களும், ரியாஸ் ஹாரிஸ் 74 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 57 ரன்களும், பிராட் ஹட்டின் 55 ரன்களும், ஷேன் வாட்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி (169), ரகானே (147) ஆகியோரின் சதத்தால் 465 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்தபோது விராட் கோலி (54), ரகானே (48) அட்டத்தால் இந்தியா போட்டியை டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. உள்ளூர் தொடரில் அதிக அளவில் சதங்கள் விளாசப்பட்டன.

    இதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் முடிவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நேற்று ஆடுகளத்தை பரிசோதித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தற்போதைய ஆடுகளம் உயிரோட்டமாக இருக்கிறது. முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



    தற்போதைய மெல்போர்ன் ஆடுகளம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆடுகளத்தை நேற்று பார்த்தபோது, அதன் அடிப்பகுதி உலர்ந்து காணப்பட்டது. ஆனால், மேற்பகுதி புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இது அப்படியே இருக்க வேண்டும். இந்த புற்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பந்து வீச போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறையை (2014) விட தற்போதைய ‘பிட்ச்’ போதுமான அளவு உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.

    முதல் இரண்டு போட்டிகளில் ஆடுகளம் என்ன செய்ததோ, அதை இந்த ஆடுகளமும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் நாங்கள் வெற்றியை எதிர்நோக்கிதான் செல்வோம்’’ என்றார்.
    Next Story
    ×