என் மலர்

  செய்திகள்

  சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி நீடிக்குமா? மும்பையுடன் நாளை மீண்டும் மோதல்
  X

  சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி நீடிக்குமா? மும்பையுடன் நாளை மீண்டும் மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் கிரிக்கெட்டில் புனேவில் நாளை நடக்கும் 27-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.#IPL #CSK #MI
  புனே:

  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேவில் நாளை நடக்கும் 27-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோற்றது.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. அம்பதி ராயுடு 283 ரன் குவித்து (6 ஆட்டம்) முதலிடத்தில் உள்ளார். டோனி (209 ரன்), வாட்சன் (191 ரன்), சுரேஷ் ரெய்னா (129 ரன்), சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் உள்ளனர்.

  பெங்களூருக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அம்பதி ராயுடு, டோனி ஆட்டம் அபாரமாக இருந்தது. டோனியின் அதிரடியால் 205 ரன் இலக்கை எடுத்தது.

  கடந்த 6 ஆட்டத்தில் 3 தடவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. இதுவே சென்னையின் பேட்டிங் பலத்துக்கு சான்றாகும்.

  பந்து வீச்சில் ‌ஷர்கூர் தாக்கூர், தீபக் சாகர், பிராவோ, இம்ரான் தாகீர் ஆகியோர் உள்ளனர்.

  நாளைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டம் தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

  அந்த அணி 6-வது வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. பேட்டிங், பீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டதாலும் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது சென்னைக்கு அவசியமாக இருக்கிறது.

  மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. 5 ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணி கடும் நெருக்கடியில் உள்ளது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் மும்பைக்கு முக்கியமானது.

  அந்த அணியில் ரோகித் சர்மா, லீவிஸ், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா, போல்லர்ட், பும்ரா போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. சில ஆட்டங்களில் கடைசி வரைவந்து தோற்றது. இதனை சரி செய்து வெற்றி பெற அந்த அணி முயலும்.

  இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

  இதற்கு மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இருந்த போதிலும் சென்னையின் அதிரடி ஆட்டத்துக்கு எதிராக மும்பை கடுமையாக போராட வேண்டியது இருக்கும். #IPL #CSK #MI
  Next Story
  ×