என் மலர்

    செய்திகள்

    உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ்
    X

    உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல கேப்டன் வீராட் கோலியின் ஆக்ரோ‌ஷமும், டோனியின் அமைதியும் அவசியம் என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல கேப்டன் வீராட் கோலியின் ஆக்ரோ‌ஷமும், டோனியின் அமைதியும் அவசியம்.

    அணியில் ஒவ்வொருவரும் ஆக்ரோ‌ஷமாக இருந்தாலும் சிக்கல், அனைவரும் அமைதியாக இருந்தாலும் சிக்கல். எனவே கோலி, டோனியை போல ஆக்ரோ‌ஷமும், அமைதியும் சம அளவில் இருப்பது அணிக்கு பயன் அளிக்கும்.

    தெண்டுல்கர், ராகுல், சேவாக், லட்சுமணன் ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.


    ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தற்போது அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

    ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா நெருக்கடி இல்லாமல் விளையாட வேண்டும். மற்ற ஆல்- ரவுண்டர்களோடு ஒப்பிடும் போது அவர் மீது அழுத்தம் வைக்கப்படுவதாக கருதுகிறேன்.

    அவர் அழுத்தமின்றி நெருக்கடியின்றி அனுபவித்து விளையாட வேண்டும். பாண்ட்யா பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினாலே சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலிக்க வாய்ப்பு ஏற்படும். பந்து வீச்சும் தானகவே வந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×