என் மலர்

  செய்திகள்

  மழையால் ஆடுகளம் மூடப்பட்டிருந்த காட்சி
  X
  மழையால் ஆடுகளம் மூடப்பட்டிருந்த காட்சி

  இங்கிலாந்து வெற்றிக்கு தடைபோட்ட மழை: 4-வதுநாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெல்போர்ன் டெஸ்டில் இன்றைய 4-வதுநாள் ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டதால் இங்கிலாந்துக்கு இருந்த வெற்றி வாய்ப்பு கரைந்துள்ளது. #AUSvENG #Ashes
  ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆன இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர் (103), ஸ்மித் (76), ஷேன் மார்ஷ் (61) ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 327 ரன்கள்  எடுத்து ஆல்அவுட் ஆனது.

  பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக்கின் அபார இரட்டை சதத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 491 ரனகள் குவித்திருந்தது. அலஸ்டைர் குக் 244 ரன்னுடனும், ஆண்டர்சன் 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


  2-வது இன்னிங்சில் 40 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருக்கும் வார்னர்

  இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே ஆண்டர்சன் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து 491 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

  முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 194 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 194 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா 43.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்னாக இருக்கும்போது மழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. வார்னர் 40 ரன்னுடனும், ஸ்மித் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


  கவாஜாவை வீழ்த்திய சந்தோசத்தில் ஆண்டர்சன்

  தற்போது ஆஸ்திரேலியா 61 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது நாளான இன்று 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது. மழையால் 46 ஓவர்கள் தடைபட்டுள்ளது. இந்த 46 ஓவர்களும் வீசப்பட்டிருந்தால் இங்கிலாந்து அணி மேலும் 100 ரன்கள் அளவில் விட்டுக்கொடுத்து ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்த வாய்ப்பு இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் மழையால் இங்கிலாந்தின் நம்பிக்கை வீண்போகியுள்ளது.
  Next Story
  ×