search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி தலைமையிலான இப்படை எங்கும் வெல்லும்: கபில்தேவ் நம்பிக்கை
    X

    கோலி தலைமையிலான இப்படை எங்கும் வெல்லும்: கபில்தேவ் நம்பிக்கை

    தென்ஆப்பிரிக்கா உள்பட எந்தவொரு வெளிநாட்டு மண்ணிலும் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி வெற்றிபெறும் என கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆடும் லெவனைத் தவிர காத்திருக்கும் வீரர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர். இதனால் ஒன்றிரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் இந்திய அணி வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் தற்போதைய இந்திய அணி எந்த வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என கபில்தேவ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா என்றாலும் சரி ஆஸ்திரேலியா என்றாலும் சரி. நம்முடைய அணி கேப்டன், அணியை எப்படி இயக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார். அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, ஆடும் லெவனில் யார் யாரை களம் இறக்குவது என்பதுதான். சிறப்பான பெஞ்ச் வலிமையை பெற்றுள்ளோம். எந்தவொரு அணியையும் வெற்றி பெற முடியும் என்ற நிலையை இந்திய அணி அடைந்துள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×