என் மலர்

  செய்திகள்

  சர்வதேச வீரராக நிலைக்க டெஸ்டில் நன்றாக ஆட வேண்டும்: விராட் கோலி
  X

  சர்வதேச வீரராக நிலைக்க டெஸ்டில் நன்றாக ஆட வேண்டும்: விராட் கோலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச அளவில் சிறந்த வீரராக உருவாக விரும்பினால் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  டெல்லியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட்டம் பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது.

  பெரோசா கோட்லா மைதானத்தில் உள்ள இரண்டு கேலரிகளுக்கு முன்னாள் வீரர்கள் பி‌ஷன்சிங் பெடி, மொகீந்தர் அமர்நாத் பெயர் சூட்டப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் இந்திய அணி கேப்டனும், டெல்லியை சேர்ந்தவருமான விராட் கோலி பாராட்டப்பட்டார். அவர் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்டிலும் தொடர்ச்சியாக சதம் அடித்தார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அவர் 51 செஞ்சூரியை தொட்டார். இதையொட்டி அவரை கவுரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.  சர்வதேச அளவில் சிறந்த வீரராக உருவாக விரும்பினால் டெஸ்டில் நன்றாக விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே இளம் வீரர்கள் டெஸ்டில் சிறப்பாக விளையாட வேண்டும். இதனால் அவர்கள் அதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

  நான் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட டெல்லி அணியில் ஆடியபோது பி‌ஷன்சிங் பெடி பயிற்சியாளராக இருந்தார். எங்களை அதிகமான நேரம் பயிற்சி பெற வைத்தார். தற்போது அது என் வாழ்க்கையில் ஒரு பகுதியாவே மாறிவிட்டது.

  இந்த நிகழ்ச்சியில் டெல்லி அணி கேப்டன்களுடன் அந்த அணியின் கேப்டனாக இருந்த நானும் சேர்ந்து இருப்பது எனக்கான கவுரவமாகும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  முன்னாள் கேப்டன் பி‌ஷன்சிங் பெடி கூறும்போது, சிறுவயதில் கோலியின் சில நடவடிக்கைகளை நான் மைதானத்தில் கண்டித்து இருக்கிறேன். ஆனால் களத்தில் அவரைவிட தீவிரமிக்க இந்திய வீரரை பார்த்தது இல்லை என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள் மொகீந்தர் அமர்நாத், மதன்லால், தீர்த்தி ஆசாத், மறைந்த முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் மனைவி ‌ஷர்மிளா தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×