என் மலர்
செய்திகள்

வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்
10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கொச்சியில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொச்சி:
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும், கடந்த ஆண்டில் (2016) அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
இந்த நிலையில் 4-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 7.15 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் இந்தி நடிகர் சல்மான்கான், நடிகை கத்ரினா கைப் ஆகியோர் நடனம் ஆடி ரசிகர்களை குதூகலப்படுத்த இருக்கிறார்கள்.
முதல் மூன்று சீசனில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. இந்த முறை பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 2 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு களம் காணும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 18 லீக் ஆட்டத்தில் விளையாடும்.
இந்தியா முழுவதும் மொத்தம் 10 நகரங்களில் போட்டி அரங்கேறுகிறது. மார்ச் 4-ந் தேதியுடன் லீக் சுற்று முடிவடையும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி கொல்கத்தாவில் மார்ச் 17-ந் தேதி நடத்தப்படுகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஆசிய கால்பந்து சம்மேளன கோப்பைக்கான போட்டியின் தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும்.
முதல் நாளான இன்று, தொடக்க விழா நிறைவடைந்ததும் இரவு 8 மணிக்கு கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்த கேரளா பிளாஸ்டர்சுடன் மல்லுகட்டுகிறது. கேரளா பிளாஸ்டர்ஸ், அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா அணி 5 முறையும், கேரளா அணி ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதில் கேரளா அணி இறுதிப்போட்டியில் 2 தடவை தோல்வியை சந்தித்ததும் அடங்கும். தற்போது இரு அணிகளும் சரிசம பலத்துடன் திகழ்வதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது முதல் ஆட்டத்தில் கோவா எப்.சி.யை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 19-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி மற்றும் வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது எடுத்த படம்
இதையொட்டி சென்னையின் எப்.சி. அணி கடந்த 10 நாட்களாக சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த மெட்டராசி (இத்தாலி) கடந்த ஆண்டுடன் விடைபெற்றதால், அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) மேற்பார்வையில் சென்னையின் எப்.சி. அணி மீண்டும் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் ஆயத்தமாக உள்ளது.
சென்னையின் எப்.சி. அணியின் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. அப்போது சென்னை அணியின் கேப்டன் ஹென்ரிக் செரனோ கூறுகையில் ‘கடந்த ஆண்டில் கடைசி கட்ட ஆட்டங்களில் கோல் வாங்கியதால் சென்னை அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் தற்போதைய அணி வித்தியாசமானது. முந்தைய ஆண்டை போல் ஆட்டத்தில் தவறு இழைக்காத வகையில் பயிற்சியில் கவனம் செலுத்தி இருக்கிறோம். இந்த முறை எங்கள் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும்’ என்றார்.
சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘பயிற்சி முகாம் நல்லபடியாக அமைந்தது. இந்த முகாம் வீரர்களை பற்றி புரிந்து கொள்வதற்கும், திட்டங்களை வகுப்பதற்கும் எனக்கு உதவிகரமாக இருந்தது. அடுத்து ஞாயிற்றுக்கிழமை எங்களது முதலாவது ஆட்டத்தில் எப்படி செயல்படப்போகிறோம் என்பதே முக்கியம். பிளே-ஆப் சுற்றுக்கு (அரைஇறுதி) தகுதி பெறுவதே எங்களது முதல் இலக்கு’ என்றார்.
நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா கருத்து தெரிவிக்கையில், ‘இந்த முறை சென்னை அணி சிறப்பாக இருக்கிறது. சீனியர் மற்றும் இளம் வீரர்கள் சரியான விகிதத்தில் இடம் பிடித்துள்ளனர். 2015-ம் ஆண்டை போல் இந்த சீசனிலும் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.
சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் வருமாறு:-
கோல்கீப்பர்கள்: கரன்ஜித்சிங், பவன்குமார், ஷாஹிம் லால் மெலோலி, பின்களம்: தனசந்திரசிங், புல்கான்கோ கார்டோஜோ, ஹென்ரிக் செரனோ (கேப்டன், போர்ச்சுகல்), இனிகோ கால்டிரோன் (ஸ்பெயின்), ஜெர்ரி லால்ரின்சூலா, கீனன் அல்மெய்டா, மெயில்சன் ஆல்வ்ஸ் (பிரேசில்), சஞ்சய் பால்முச்சு, நடுகளம்: அனிருத் தபா, பிக்ரம்ஜித்சிங், தனபால் கணேஷ், பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ், ஜெர்மன்பிரீத்சிங், ஜெயிம் காவிலன் (ஸ்பெயின்), ரபெல் அகஸ்டோ (பிரேசில்), ரெனி மிஹெலிச் (சுலோவேனியா), தோய்சிங், முன்களம்: கிரிகோரி நெல்சன் (நெதர்லாந்து), ஜெஜெ லால்பெகுலா, ஜூட் நவோரு (நைஜீரியா), முகமது ரபி, போரிங்டா போடோ.
போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story