என் மலர்
செய்திகள்

ஹர்த்திக் பாண்ட்யா சிறந்த வீரராக உருவாகி வருகிறார்: கபில்தேவ் பாராட்டு
ஹர்த்திக் பாண்ட்யா சிறந்த வீரராக உருவாகி வருகிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய அணியில் ஹர்த்திக் பாண்ட்யாவின் வளர்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மூன்று வடிவிலான போட்டியிலும் நேர்த்தியாக ஆடுகிறார். சிறந்த வீரராக அவர் உருவாகி வருகிறார்.

பாண்ட்யாவை ஆல்ரவுண்டராக மாற்றும் முயற்சியாகவே அவரை வெவ்வேறு பேட்டிங் வரிசையில் அணி நிர்வாகம் களம் இறக்கி வருகிறது. அணி நிர்வாகத்தின் இந்த முடிவு சரியானதே.
வேகப்பந்து வீரரான பும்ராவை முதல் முறையாக பார்க்கும் போது வித்தியாசமான செயல் அமைப்புடன் பந்துவீசும் அவர் எவ்வளவு நீடிப்பார் என்று எண்ணினேன். ஆனால் என்னை போன்றவர்களின் எண்ணங்களை அவர் மாற்றிவிட்டார். பும்ரா மிகவும் அபாரமாக பந்துவீசுகிறார். அணியில் நீண்ட நாட்களுக்கு நீடிப்பேன் என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.

ஒவ்வொரு கேப்டனுக்கும், ஒவ்வொரு எண்ணம் இருக்கும். வீராட்கோலியை பொருத்த வரையில் உடல் தகுதி விஷயத்தை அணியில் தீவிரப்படுத்தி உள்ளார். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும்.
ஒரு விளையாட்டின் மேம்பாட்டுக்காகவே புதிய விதிகள் கொண்டு வரப்படுகிறார். அந்த வகையில் ஐ.சி.சி. புதிய விதிமுறைகளை கிரிக்கெட்டில் கொண்டு வந்துள்ளன. இந்த புதிய விதிகள் ஆட்டத்தின் தாக்கத்தை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலககோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story