என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதிக்கு முன்னேறியது. அர்ஜென்டினா வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் 16 அணிகள், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஏ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் போட்டியை நடத்தும் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
கேப்ரியல் பார்போசா (2 கோல்), கேப்ரியல் ஜீசஸ், லுவான் ஆகியோர் பிரேசில் அணியில் கோல் அடித்தனர். தென்ஆப்பிரிக்கா மற்றும் ஈராக்குக்கு எதிராக கோல் எதுவும் அடிக்காமல் டிரா கண்டதால் பிரேசில் அணியினர் மீது உள்ளூர் ரசிகர்கள் வெறுப்பை காட்டினர். தற்போதைய வெற்றி, ரசிகர்களின் கோபத்தை தணித்திருக்கும்.
இரண்டு முறை (2004, 2008) சாம்பியனான அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக்கில் (டி பிரிவு) ஹோண்டுராசுடன் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கியது. எதிரணி இரண்டு பெனால்டி வாய்ப்பை தவற விட்ட போதிலும், அர்ஜென்டினா அணியால் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து டிரா மட்டுமே (1-1) செய்ய முடிந்தது. ‘டி’ பிரிவில் போர்ச்சுகல் (7 புள்ளி) முதலிடத்தையும், ஹோண்டுராஸ், அர்ஜென்டினா தலா 4 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் இருந்தன. கோல் வித்தியாசம் அடிப்படையில் ஹோண்டுராஸ் கால்இறுதி வாய்ப்பை பெற்றது. அர்ஜென்டினா ‘வீட்டுக்கு’ அனுப்பப்பட்டது. சி பிரிவில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நடப்பு சாம்பியன் மெக்சிகோவும் லீக் சுற்றுடன் காலியானது.
நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் போர்ச்சுகல்-ஜெர்மனி, நைஜீரியா-டென்மார்க், தென்கொரியா-ஹோண்டுராஸ், பிரேசில்- கொலம்பியா ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற 27 வயதான ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா அந்தரத்தில் பல்வேறு சாகசங்களை அபாரமாக செய்து காட்டி அனைவரையும் அசத்தினார்.
இதன் மூலம் அவர் ஒட்டு மொத்தத்தில் (ஆல்-ரவுண்ட்) 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் 44 ஆண்டுகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆல்-ரவுண்ட்டில் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் உச்சிமுரா இந்த பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆண்கள் அணிகள் பிரிவிலும் உச்சிமுரா தங்கப்பதக்கம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்க அணியின் ஆதிக்கம் தொடருகிறது.
ரியோ ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்க அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சீனா, வெனிசுலாவை எளிதில் தோற்கடித்தது.
இந்த நிலையில் 3-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. இதில் ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் அமெரிக்காவுக்கு கடும் சவால் அளித்தது. முதல் இரண்டு கால் பகுதி ஆட்டங்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகள் முன்னிலை பெற்றது.
கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் அபாரமாக செயல்பட்ட அமெரிக்க அணி 98-88 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்து தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்தது. 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இருந்து அமெரிக்க அணி தொடர்ந்து பெற்ற 20-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 77 கிலோ உடல் எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரர் நிஜத் ரஹிமோவ், மொத்தம் 379 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 77 கிலோ உடல் எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரர் நிஜத் ரஹிமோவ், மொத்தம் 379 கிலோ எடை தூக்கி (ஸ்னாச் 165 கிலோ, கிளன் அண்ட் ஜெர்க் பிரிவு 214 கிலோ) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதில் கிளன் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் தூக்கிய 214 கிலோ உலக சாதனையாகும். ஊக்கமருந்து சர்ச்சையால் 2008, 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கப்பதக்கத்தை பறிகொடுத்துள்ள கஜகஸ்தானுக்கு நடப்பு ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் மகுடம் இதுவாகும்.
நிஜத் ரஹிமோவும் 2013-ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுகள் தடையை அனுபவித்தவர் தான். அது மட்டுமின்றி இவர் அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டுக்காக விளையாடிய ரஹிமோவ் பிறகு கஜகஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது கஜகஸ்தானுக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
சீனாவின் லு ஜியாவ்ஜூன் 379 கிலோவுடன்(ஸ்னாச் 177 கிலோ, கிளன் அண்ட் ஜெர்க் 202 கிலோ) 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும், எகிப்து வீரர் முகமது இஹாப் 361 கிலோவுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். ஆண்கள் பளுதூக்குதலில் 1948-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் எகிப்து வீரர் என்ற சிறப்பை முகமது இஹாப் பெற்றார்.
எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் இறங்கிய இந்திய வீரர் சதீஷ்குமார் 329 கிலோ தூக்கி ஏமாற்றம் அளித்தார். 14 பேரில் அவர் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் தேசிய சாதனையாக 336 கிலோ எடை தூக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயலின் அங்கீகார அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக்குக்கு சென்றுள்ள இந்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயலின் அங்கீகார அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரித்துள்ளது.
“அங்கீகாரம் பெறாத தனிநபர்களை அழைத்து கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் விஜய் கோயல் நுழைய முயற்சிக்கிறார். இது பற்றி அங்குள்ள ஊழியர்கள் எடுத்து கூறிய போது, அதை கேட்காமல் அவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டு அவர்களை தள்ளி விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்ந்தால் விஜய் கோயலின் ஒலிம்பிக் போட்டிக்குரிய அங்கீகார அட்டை ரத்து செய்யப்படும்’ என்று ஒலிம்பிக் கமிட்டி மேலாளர் சாரா பீட்டர்சன் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் பேட்மிண்டனில் சாய்னா, சிந்து தங்களது முதல் ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
ரியோ டி ஜெனீரோ:
ஒலிம்பிக் பேட்மிண்டனில் சாய்னா, சிந்து தங்களது முதல் ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது. பெண்கள் ஒற்றையரில் 13 பிரிவுகளாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் லீக்கில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் வீராங்கனைகள் அடுத்த சுற்றை அடைவார்கள்.
இதில் தரவரிசையில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் அங்கம் வகிக்கும் ஏ, இ, பி பிரிவில் முதலிடம் பிடிப்போர் மட்டும் நேரடியாக கால்இறுதிக்கும், மற்ற பிரிவினர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெறுவார்கள்.
'எம்' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, ஹங்கேரியின் லாவ்ரா சரோசியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சரமாரியான ஷாட்டுகளை விளாசி எதிராளியை விழிபிதுங்க வைத்த பி.வி.சிந்து 21-8, 21-9 என்ற நேர் செட் கணக்கில் சரோசியை போட்டு தாக்கினார். வெறும் 27 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிந்து தனது 2-வது மற்றும் கடைசி லீக்கில் மிசெலி லியுடன் (கனடா) நாளை மறுதினம் மோதுகிறார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மற்றொரு இந்திய புயல் சாய்னா நேவால், மரியா யுலிடினா (உக்ரைன்), விசென்ட் லோஹய்னி (பிரேசில்) ஆகியோருடன் 'ஜி' பிரிவில் இருக்கிறார். தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் முதல் லீக்கில் 73-ம் நிலை வீராங்கனையான விசென்ட் லோஹய்னியுடன் மோதினார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய விசென்ட் தொடக்கத்தில் சாய்னாவை தடுமாற விட்டார். ஒரு கட்டத்தில் சாய்னா 13-14 என்று பின்தங்கினார். அதன் பிறகு சுதாரித்து கொண்ட சாய்னா சரிவில் இருந்து எழுச்சி பெற்று முதல் செட்டை வசப்படுத்தினார். இதைத் தொடர்ந்து 2-வது செட்டில் எதிராளியின் கையை ஓங்க விடாமல் பார்த்துக் கொண்டார். 39 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் இறுதியில் சாய்னா நேவால் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றியை சுவைத்தார். சாய்னா அடுத்து மரியா யுலிடினாவுடன் நாளை மறுதினம் சந்திக்கிறார்.
பெண்கள் இரட்டையரில் தலா 4 ஜோடிகள் வீதம் 4 பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் ஜோடிகள் கால்இறுதிக்குள் நுழையும்.
'ஏ' பிரிவில் இடம் வகிக்கும் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி, தங்களது முதல் சவாலை உலகின் 'நம்பர் ஒன்' கூட்டணியான ஜப்பானின் மிசாகி மாட்சுடோமோ- தகஹசி அயகா இணையுடன் தொடங்கியது. எதிர் ஜோடியின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஜூவாலா-அஸ்வினி ஜோடி 15-21, 10-21 என்ற நேர் செட்டில் பணிந்தது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் ஜூவாலா-அஸ்வின் கூட்டணி வென்றால் மட்டுமே கால்இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
ஆண்கள் இரட்டையர் பிரிவும் இதே பாணியில் நடத்தப்படுகிறது. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் அனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில் 18-21, 13-21 என்ற நேர் செட்டில் அஷன் முகமத்- செதிவான் ஹேந்த்ரா (இந்தோனேஷியா) இணையிடம் தோல்வியை தழுவியது.

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காணவந்த ரசிகர்களிடம் உள்ளூர்வாசிகள் வெளிப்படையாக திருடும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோவில் உலகின் மிகப்பெரிய தொடரான ஒலிம்பிக் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக் தொடரை நடத்த விருப்பப்படும். தன்னுடைய நாட்டிற்கு பெருமையை வந்து சேர்வதுடன், கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வருவதால் பொருளாதார வருமானமும் அதிக அளவில் கிடைக்கும்.
ஆனால், பிரேசில் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொருளாதார நிலைமை சீராக இல்லை. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாட்டில் மக்கள் வறுமையில் வாடும்போது கோடி கணக்கான பணத்தை செலவழிப்பதா? என போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே ஜிகா வைரசும் மிரட்டியது. பல்வேறு இடையூறுகளுக்கிடையில் ரியோ ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வந்தது. ரியோவில் தெருவோரம் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
தற்போது ஒலிம்பிக் போட்டியை காணவரும் ரசிகர்களிடம் வறுமையால் வாடும் உள்ளூர்வாசிகள் குறிப்பாக சிறுவர்கள் பகல் இரவு என்று பாராமல் பட்டப்பகலிலேயே சர்வசாதரணமாக திருடிகிறார்கள்.
சில ரசிகர்கள் அவர்களை தாக்குகிறார்கள். சில ரசிகர்கள் உயிருக்கு பயந்து கேட்டதை கொடுக்கிறார்கள். குறிப்பாக கழுத்தில் கிடக்கும் செயின் மற்றும் கையில் வைத்திருக்கும் செல்போன்களை எளிதாக பறித்துச் செல்கிறார்கள்.
அந்த வீடியோவை நீங்கள் பார்க்க...

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என தோல்வியடைந்தது.
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது.
முதல் காலிறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி நேரம் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருந்தது.
3-வது காலிறுதி ஆட்டத்தில் ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் (31:43) நெதர்லாந்து அணிக்கு ஷாட் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்நாட்டு வீரர் ரோஜியர் ஹாஃப்மன் கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் இந்தியா பதில் கோல் போட்டது. ஷாட் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரகுநாத் வக்காலிகா கோல் அடித்தார்.
இதனால் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது. அதன்பின் நெதர்லாந்து வீரர்களை கோல்கள் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பான முறையில் தடுத்தார்கள். ஆனால், ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருக்கும் நிலையில் நெதர்லாந்து வீரர் வான் டெர் கோல் அடித்தார். இதனால் 2-1 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது. ஆட்டம் முடியும் கடைசி வினாடியில் இந்தியாவிற்கு ஷாட் பெனால்டில் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இந்தியா வீணடித்தால் இந்தியா 2-0 என தோல்வியை தழுவியது.
இந்தியா கடைசியாக கனடாவை நாளை எதிர்கொள்கிறது. இதுவரை முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பி பிரிவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பி பிரிவில் ஆறு அணிகள் உள்ளன. முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்தியா காலிறுதிக்கு தகுதி தகுதிப் பெற்றுள்ளது. அயர்லாந்து, கனடா அணிகள் வெளியேற்றம் அடைந்துள்ளன.

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசியாவின் ஹெண்ட்ரா செட்டியாவான்- மொகமது அசான் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டில் இந்திய ஜோடி கடுமையாக போராடியது. இரண்டு ஜோடிகளும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 18 நிமிடங்கள் நீடித்த இந்த செட்டில் சுமீத் ரெட்டி- மானு அட்ரி ஜோடி 18-21 என முதல் செட்டை இழந்தது.
ஆனால் 2-வது செட்டில் இந்திய ஜோடி மிகவும் பின்தங்கியது. இதனால் இந்த செட்டை 13-21 என எளிதில் இழந்து 0-2 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சுற்றில் இந்திய ஜோடியால் 13 நிமிடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டது.
‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள சுமீத் ரெட்டி- மானு அட்ரி நாளை சீன ஜோடியையும், 14-ந்தேதி ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.

வில்வித்தையில் மற்றொரு இந்திய வீராங்கனையான பம்பையிலா தேவியும் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் வில்வித்தை பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தீபிகா குமாரி 0-6 என தோல்வியடைந்து வெளியேறினார். அடுத்து பம்பையிலா தேவி மெக்சிகோவின் அலேஜெந்த்ரா வாலென்சியாவை எதிர்கொண்டார்.
முதல் சுற்றில் பம்பையிலா 26 புள்ளிகள் எடுத்தார். ஆனால் மெக்சிகோ வீராங்கனை 28 புள்ளிகள் பெற்றார். ஆனால் 2-வது செட்டில் பம்பையிலா தேவி சிறப்பாக விளையாடினார். இவர் 26 புள்ளிகள் பெற்றார். மெக்சிகோ வீராங்கனை 23 புள்ளிகளே பெற்றார். இதனால் 2-2 என இருவரும் சமநிலையில் இருந்தனர்.
ஆனால், 3-வது சுற்றில் பம்பையிலா தேவி 27, மெக்சிகோ வீராங்கனை 28 புள்ளிகளும் பெற்றனர். இதனால் 4-2 என மெக்சிகோ வீராங்கனை முன்னிலை பெற்றார். 4-வது செட்டில் தேவி சொதப்பியதால் 23 புள்ளிகளே கிடைத்தது. மெக்சிகோ வீராங்கனை 25 புள்ளிகளுடன் அந்த சுற்றை கைப்பற்றி 6-2 என வெற்றி பெற்றார்.
வில்வித்தையிலாவது இந்தியா தங்கம் பெறுமா? என்ற ஏக்கத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, இவர்களின் தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியடைந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினார்.
ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வில்வித்தை போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீன தைபேயின் யா-டிங் டன்-ஐ எதிர்கொண்டார்.
முதல் சுற்றில் தீபிகா குமாரி 27 புள்ளிகள் பெற்றார். ஆனால் சீன தைபே வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று முதல் சுற்றைக் கைப்பற்றி 2 புள்ளிகள் பெற்றார்.
2-வது சுற்றில் தீபிகா 26 புள்ளிகளே பெற்றார். சீன தைபே வீராங்கனை 29 புள்ளிகள் பெற்றதால் 2 புள்ளிகள் பெற்றார். 3-வது சுற்றிலும் தீபிகா குமாரி சிறப்பாக செயல்படவில்லை. அவருக்கு 27 புள்ளிகளே கிடைத்தது, ஆனால் சீன தைபே வீராங்கனை மூன்று முறையில் 10-ற்கான இலக்கை அடித்து 30 புள்ளிகள் அள்ளினார்.
இதனால் ஐந்து சுற்றுகள் கொண்ட போட்டியில் மூன்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று 6-0 என சீன தைபே வீராங்கனை பெற்றி பெற்றார்.

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வியடைந்தது.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் இன்று பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டது.
ஜப்பான் ஜோடிக்கு ஈடுகொடுக்க ஜூவாலா- பொன்னப்பா ஜோடி திணறியது. முதல் செட்டில் இந்திய ஜோடி 4-1 என முன்னிலையில் இருந்தது. அதன்பின் ஜப்பான் ஜோடி 7-5 என முன்னிலை பெற்றது. அதன்பின் 11-8 என பின்தங்கியது. ஒரு கட்டத்தில் 14-17 என இந்திய ஜோடி பின்தங்கியிருந்தது. அதன்பின் இந்திய ஜோடியால் முன்னேறி வர முடியவில்லை. இதனால் இந்த செட்டை 15-21 என இழந்தது.
2-வது செட்டிலும் இந்திய ஜோடியால் முன்னிலை வகிக்க முடியவில்லை. தொடக்கத்திலேயே ஜப்பான் ஜோடி 5-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் 10-6 என முன்னிலை பெற்றது. அதன்பின் 18-10 என வலுவான முன்னிலைக்கு சென்றது.
அதன்பின்னர் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று ஜப்பான் ஜோடி 21-10 என 2-வது செட்டையும் கைப்பற்றியது.
இதனால் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 15-21, 10-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இனி நாளை நெதர்லாந்து ஜோடியையும், நாளை மறுநாள் தாய்லாந்து அணியையும் இந்திய ஜோடி எதிர்கொள்கிறது.