என் மலர்
செய்திகள்

வில்வித்தையில் மற்றொரு இந்திய வீராங்கனை பம்பையிலா தேவியும் ஏமாற்றம்
வில்வித்தையில் மற்றொரு இந்திய வீராங்கனையான பம்பையிலா தேவியும் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் வில்வித்தை பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தீபிகா குமாரி 0-6 என தோல்வியடைந்து வெளியேறினார். அடுத்து பம்பையிலா தேவி மெக்சிகோவின் அலேஜெந்த்ரா வாலென்சியாவை எதிர்கொண்டார்.
முதல் சுற்றில் பம்பையிலா 26 புள்ளிகள் எடுத்தார். ஆனால் மெக்சிகோ வீராங்கனை 28 புள்ளிகள் பெற்றார். ஆனால் 2-வது செட்டில் பம்பையிலா தேவி சிறப்பாக விளையாடினார். இவர் 26 புள்ளிகள் பெற்றார். மெக்சிகோ வீராங்கனை 23 புள்ளிகளே பெற்றார். இதனால் 2-2 என இருவரும் சமநிலையில் இருந்தனர்.
ஆனால், 3-வது சுற்றில் பம்பையிலா தேவி 27, மெக்சிகோ வீராங்கனை 28 புள்ளிகளும் பெற்றனர். இதனால் 4-2 என மெக்சிகோ வீராங்கனை முன்னிலை பெற்றார். 4-வது செட்டில் தேவி சொதப்பியதால் 23 புள்ளிகளே கிடைத்தது. மெக்சிகோ வீராங்கனை 25 புள்ளிகளுடன் அந்த சுற்றை கைப்பற்றி 6-2 என வெற்றி பெற்றார்.
வில்வித்தையிலாவது இந்தியா தங்கம் பெறுமா? என்ற ஏக்கத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, இவர்களின் தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Next Story