என் மலர்
செய்திகள்

வில்வித்தை: காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு தீபிகா குமாரி வெளியேற்றம்
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியடைந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினார்.
ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வில்வித்தை போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீன தைபேயின் யா-டிங் டன்-ஐ எதிர்கொண்டார்.
முதல் சுற்றில் தீபிகா குமாரி 27 புள்ளிகள் பெற்றார். ஆனால் சீன தைபே வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று முதல் சுற்றைக் கைப்பற்றி 2 புள்ளிகள் பெற்றார்.
2-வது சுற்றில் தீபிகா 26 புள்ளிகளே பெற்றார். சீன தைபே வீராங்கனை 29 புள்ளிகள் பெற்றதால் 2 புள்ளிகள் பெற்றார். 3-வது சுற்றிலும் தீபிகா குமாரி சிறப்பாக செயல்படவில்லை. அவருக்கு 27 புள்ளிகளே கிடைத்தது, ஆனால் சீன தைபே வீராங்கனை மூன்று முறையில் 10-ற்கான இலக்கை அடித்து 30 புள்ளிகள் அள்ளினார்.
இதனால் ஐந்து சுற்றுகள் கொண்ட போட்டியில் மூன்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று 6-0 என சீன தைபே வீராங்கனை பெற்றி பெற்றார்.

Next Story