என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி- மானு அட்ரி ஜோடி தோல்வி
    X

    ரியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி- மானு அட்ரி ஜோடி தோல்வி

    ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்தது.
    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசியாவின் ஹெண்ட்ரா செட்டியாவான்- மொகமது அசான் ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டில் இந்திய ஜோடி கடுமையாக போராடியது. இரண்டு ஜோடிகளும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 18 நிமிடங்கள் நீடித்த இந்த செட்டில் சுமீத் ரெட்டி- மானு அட்ரி ஜோடி 18-21 என முதல் செட்டை இழந்தது.

    ஆனால் 2-வது செட்டில் இந்திய ஜோடி மிகவும் பின்தங்கியது. இதனால் இந்த செட்டை 13-21 என எளிதில் இழந்து 0-2 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சுற்றில் இந்திய ஜோடியால் 13 நிமிடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டது.

    ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள சுமீத் ரெட்டி- மானு அட்ரி நாளை சீன ஜோடியையும், 14-ந்தேதி ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×