என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    2168 வருட ஒலிம்பிக் சாதனையை அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் முறியடித்துள்ளார்.
    அமெரிக்காவின் முன்னணி நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். ரியோவிற்கு முன் 18 தங்க பதக்கங்கள் வென்றிருந்த பெல்ப்ஸ், தற்போது ரியோவில் நான்கு பதக்கங்கள் வென்றுள்ளார். இதன் மூலம் 22 தங்கப் பதக்கம் வென்று அதிக தங்கம் வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

    இதில் தனிப்பிரிவில் மட்டும் 13 தங்க பதக்கங்கள் வென்றுள்ளார். இதன்மூலம் தனி நபர் போட்டியில் 13 தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் கிறிஸ்து பிறப்பதற்கு முன் கி.மு. 152-ல் லியோனிதாஸ் கிரேக் போட்டியில் படைத்த சாதனையை முறியடித்துள்ளார்.

    லியோனிதாஸ் ஆஃப் ரோட்ஸ் கி.மு. 152, கி.மு. 154, கி.மு. 155, கி.மு. 156, கி.மு. 157 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பழங்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதில் மூன்று ஓட்டப் பந்தயங்களில் தலா நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

    பெல்ப்ஸ் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் 2004, 2008 மற்றும் 2012-ம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளார். 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் 2004, 2008 மற்றும் 2016-ம் ஆண்டில் பதக்கம் வென்றுள்ளார். 200 மீட்டர் மெட்லே பிரிவில் 2004, 2008, 2012 மற்றும் 2016-ல் பதக்கம் வென்றுள்ளார். 400 மீட்டர் மெட்லேயில் 2004 மற்றும் 2008-ல் பதக்கம் வென்றுள்ளார். 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் 2008-ம் ஆண்டு பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 13 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
    ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரர் - வீராங்கனைகளின் 2000 பேரின் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா நாடான பிரேசிலின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு முன் வீரர்கள், வீராங்கனைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பீஜிங்கில் 2008-ம் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும், 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும் பங்கேற்ற வீரர்களின் மாதிரி மறுபரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. அத்துடன் ரஷ்யாவில் நடைபெற்ற சோச்சி ஒலிம்பிக்கில் ரஷியாவே வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொள்ள உதவியது தெரியவந்தது.

    இதனால் ரியோ ஒலிம்பிக் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விரும்பியது.

    அதன்படி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடம் எடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. 4500 வீரர்கள் - வீராங்கனைளிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மற்றும் 1000 வீரர்கள் - வீராங்கனைகளிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி ஆகியவற்றை பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையில் பாசிட்டிவ் முடிவுகள் வந்ததா? என்பது குறித்து விளக்கம் அளிக்க ஐ.ஓ.சி. மறுத்துவிட்டது.
    ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 16 தங்கம் உள்பட 38 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் 21-வது இடத்தில் உள்ளது.
    தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் ‘ஒலிம்பிக் 2016’ தொடர் ‘ரியோ ஒலிம்பிக்’ என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இன்று 7-வது நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 7-வது நாள் தொடக்கத்தில் பதக்க பட்டியலில் அமெரிக்கா 16 தங்கம், 12 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    சீனா 11 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் 13 வெண்கலத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் தலா ஒரு பதக்கங்களுடன் 21-வது இடத்தில் உள்ளது. இந்தியா இன்னும் பதக்கம் எண்ணிக்கையை தொடங்கவில்லை.

    ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று முன்னிலையில் இருக்கும் நாடுகள் விவரம்:-

    . எண்

    நாடு

    தங்கம்

    வெள்ளி

    வெண்கலம்

    மொத்தம்

    1

    அமெரிக்கா

    16

    12

    10

    38

    2

    சீனா

    11

    8

    11

    30

    3

    ஜப்பான்

    7

    2

    13

    22

    4

    ஆஸ்திரேலியா

    5

    4

    6

    15

    5

    தென்கொரியா

    5

    2

    4

    11

    6

    ஹங்கேரி

    5

    1

    1

    7

    7

    ரஷியா

    4

    8

    7

    19

    8

    பிரிட்டன்

    4

    6

    6

    16

    9

    ஜெர்மனி

    4

    3

    1

    8

    10

    இத்தாலி

    3

    6

    3

    12

    11

    பிரான்ஸ்

    2

    4

    5

    11

    12

    கஜகஜஸ்தான்

    2

    2

    3

    7

    13

    தாய்லாந்து

    2

    1

    1

    4

    14

    ஸ்பெயின்

    2

    0

    1

    3

    14

    சுவிட்சர்லாந்து

    2

    0

    1

    3

    16

    குரோஷியா

    2

    0

    0

    2

    17

    நியூசிலாந்து

    1

    4

    0

    5

    18

    நெதர்லாந்து

    1

    2

    2

    5

    19

    ஸ்வீடன்

    1

    2

    1

    4

    20

    கனடா

    1

    1

    5

    7

    21

    பெல்ஜியம்

    1

    1

    1

    3

    21

    பிரேசில்

    1

    1

    1

    3

    21

    ஸ்லோவேனியா

    1

    1

    1

    3

    24

    கொலம்பியா

    1

    1

    0

    2

    24

    ஸ்லோவாகியா

    1

    1

    0

    2

    24

    வியட்னாம்

    1

    1

    0

    2

    27

    போலந்து

    1

    0

    2

    3

    27

    சீன தைபே

    1

    0

    2

    3

    29

    செக் குடியரசு

    1

    0

    1

    2

    29

    க்ரீஸ்

    1

    0

    1

    2

    31

    அர்ஜென்டினா

    1

    0

    0

    1

    31

    பிஜி

    1

    0

    0

    1

    31

    ஐ.ஓ.ஏ.

    1

    0

    0

    1

    31

    கொசோவோ

    1

    0

    0

    1

    31

    ருமேனியா

    1

    0

    0

    1

    36

    தென்ஆப்பிரிக்கா

    0

    3

    1

    4

    37

    வட கொரியா

    0

    2

    2

    4

    38

    உக்ரைன்

    0

    2

    1

    3

    39

    அஜர்பைஜான்

    0

    2

    0

    2

    39

    இந்தோனேசியா

    0

    2

    0

    2

    42

    ஜார்ஜியோ

    0

    1

    1

    2

    42

    லிதுவேனியா

    0

    1

    1

    2

    44

    மலேசியா

    0

    1

    0

    1

    44

    மங்கோலியா

    0

    1

    0

    1

    44

    பிலிப்பைன்ஸ்

    0

    1

    0

    1

    44

    துருக்கி

    0

    1

    0

    1

    48

    எகிப்து

    0

    0

    2

    2

    48

    உஸ்பெகிஸ்தான்

    0

    0

    2

    2

    50

    எஸ்டோனியா

    0

    0

    1

    1

    50

    இஸ்ரேல்

    0

    0

    1

    1

    50

    கிர்கிஸ்தான்

    0

    0

    1

    1

    50

    நார்வே

    0

    0

    1

    1

    50

    போர்ச்சுக்கல்

    0

    0

    1

    1

    50

    துனிசியா

    0

    0

    1

    1

    50

    யு.ஏ.இ.

    0

    0

    1

    1



    ரியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகமான ரக்பி செவன்ஸ் போட்டியில் பிஜி அணி வெற்றி பெற்று தங்கம் வென்றதன்மூலம் அந்த அணி ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ரக்பி செவன்ஸ் போட்டி முதல் முறையாக சேர்க்கப்பட்டது. இதில் ஆடவர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் சிறிய தீவு நாடான பிஜி நாட்டின் அணியும், பிரிட்டன் அணியும் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பிஜி அணி 43-7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம் ஒலிம்பிக் ரக்பி செவன்ஸ் போட்டிக்கான முதல் தங்கத்தை பிஜி வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் போட்டியில் பிஜி பெறும் முதல் பதக்கமும் இதுதான். எனவே, இந்த வெற்றியை பிஜி மக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இப்போட்டியில் பிரிட்டனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய அணி ஜப்பானை வீழ்த்தி பதக்கம் வென்றது.

    மகளிருக்கான ரக்பி செவன்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியா தங்கப் பதக்கம் வென்றது. நியூசிலாந்து வெள்ளி, கனடா வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
    ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 2 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர்.
    ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் சிமோன் மானுவே, கனடா வீராங்கனை பென்னி ஜாலகஸ்கே இருவரும் பந்தய தூரத்தை சரியாக 52.70 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். இதனால் இருவருக்கும் முதல் இடம் வழங்கி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

    2 பேர் தங்கம் வென்றதால் வெள்ளி பதக்கம் வழங்கப்படவில்லை. வெண்கல பதக்கத்தை சுவீடனை சேர்ந்த சாரா ஜோஸ்ரோம் வென்றார்.

    இதேபோல், எப்போதாவது ஒருமுறை தான் ஒலிம்பிக்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் மெக்சிகோ வீரரை வீழ்த்தினார்.
    ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடம்பி எச் பிரிவில் இடம் பெற்று உள்ளார். அவர் தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் லினோ முன்ஹெசுடன் மோதினார். இதில் அவர் 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் சுவீடன் வீரர் ஹென்ரியுடன் 14-ந் தேதி மோதுகிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி ஜோடி ஜப்பான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அனுஅட்ரி-சுமித் ரெட்டி முதல் சுற்றில் தோற்றது.
    பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய அணி பங்கேற்ற ஆக்கி போட்டியின் போது அரங்கிற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறப்பட்ட புகாரை விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் மறுத்துள்ளார்.
    ரியோ:

    ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அங்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், போட்டி நடக்கும் அரங்கிற்கு அங்கீகார அட்டை இல்லாதவர்களையும் தன்னுடன் விஜய் கோயல் அழைத்துச் சென்றதாகவும் அப்போது விஜய் கோயல் தரப்புக்கும், ஒலிம்பிக் கமிட்டி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் விஜய் கோயலின் அடையாள அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், இது குறித்த புகாரை விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மறுத்துள்ளார்.

    இந்திய அணி பங்கேற்கும் ஆக்கி போட்டியில், அவர்களை ஊக்குவிக்கதான் மைதானத்திற்கு சென்றேன். அதற்காகதான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். அது எப்படி ஒரு குற்றம் ஆகும்? இதில் எனக்கு எதிராக எந்த புகாரும் இல்லை. தவறான புரிதலால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நள்ளிரவு நடந்த நீச்சல் ஆண்கள் தனிநபர் 200 மீட்டர் மெட்லே பிரிவில் பங்கேற்ற மைக்கேல் பெல்ப்ஸ் தங்கம் வென்றார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் நான்கு கைப்பற்றி உள்ளார்.
    ரியோ டி ஜெனிரோ:

    அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்க வேட்டை மன்னனாக திகழ்கிறார். ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன் அவர் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக பதக்கம் (22) வென்று சாதனை வீரராக திகழ்ந்தார்.

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் 4x100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு, 4x200 மீட்டர் தொடர் பிரிஸ்டைலிலும் தங்கம் வென்றார். இதுவரை அவர் 3 தங்கம் வென்று இருந்தார்.

    நள்ளிரவு நடந்த நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் 4-வது தங்கம் வென்றார். ஆண்கள் தனிநபர் 200 மீட்டர் மெட்லே பிரிவில் பங்கேற்ற அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 54.66 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    வெள்ளி பதக்கத்தை ஜப்பான் வீரர் ஹகினோ கோசூகேவும் (1 நிமிடம் 56.6 வினாடி), வெண்கல பதக்கத்தை ‌ஷன் வாங்கும் (1 நிமிடம் 57.05 வினாடி) வென்றனர்.

    மைக்கேல் பெல்ப்ஸ் தான் பங்கேற்ற 4 போட்டியிலும் தங்கம் வென்று அசத்தி உள்ளார். இன்னும் அவருக்கு ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது. இதிலும் அவர் வெற்றி பெற்றால் தங்கப் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயரும்.

    ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் 22-வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். ஒட்டுமொத்த ஒலிம்பிக்கில் 26 பதக்கம் வென்று சாதனை புரிந்து இருக்கிறார்.

    பெல்ப்ஸ் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும், தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கமும் ஆக மொத்தம் 22 தங்கம் வென்றுள்ளார்.

    லண்டன் ஒலிம்பிக்கில் 2 வெள்ளியும், ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலமும் பெற்றுள்ளார். பெல்ப்ஸ் 22 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 26 பதக்கங்களை வென்று உள்ளார்.
    ரியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தென்கொரியா வீரருடன் இன்று மோதும் அதானு தாஸ் காலிறுதிக்கு முன்னேறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் பங்கேற்றார். அவர் ரேங்கிங் சுற்றில் 5-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) முன்னேறினார்.

    இந்த சுற்றில் அதானுதாஸ் 6-0 என்ற புள்ளி கணக்கில் நேபாள வீரர் முக்டர் ஜித்பெகதுரை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் (ரவுண்ட் 16) கியூபா வீரரை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடக்கும் கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் தென்கொரிய வீரர் லீ செங்யுன்னுடன் அதானுதாஸ் மோதுகிறார். இந்த ஆட்டம் மாலை 5.45 மணிக்கு நடக்கிறது. இதில் வென்று கால் இறுதிக்கு அதானுதாஸ் முன்னேறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்கள் ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பிய்லா தேவி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி தோற்று வெளியேறி இருந்தது. இதன் மூலம் பெண்கள் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
    ரியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வீழ்த்தியது.
    ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி “பீ” பிரிவில் இடம் பெற்று உள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியும் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திலும் 0-3 என்ற கணக்கிலும் 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-6 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்தது.

    இந்திய அணி 4-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. இதில் அமெரிக்க அணியினர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு இந்திய வீராங்கனைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    அமெரிக்க வீராங்கனை கேத்லீன் 14-வது நிமிடத்திலும், 42-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். 52-வது நிமிடத்தில் மெலிஸ்சா 3-வது கோலை அடித்தார். இறுதி வரை இந்திய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிவில் அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

    இந்திய அணி இதுவரை 4 போட்டியில் 3 தோல்வி, ஒரு டிராவுடன் ஒரு புள்ளியுடன் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவுடன் நாளை மோதுகிறது.

    காலிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் நாளைய மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
    ரியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ்- போபண்ணா ஜோடியும், பெண்கள் இரட்டையரில் சானியா மிர்சா- தாம்பரே ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- போபண்ணா ஜோடி களம் இறங்கியது.

    இதில் லியாண்டர் பெயஸ்- போபண்ணா ஜோடியும், சானியா மிர்சா- தாம்பரே ஜோடியும் தங்கள் பிரிவில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி களம் இறங்கியது. முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமந்தா - பியர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா- போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.

    கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றுக்கு அடுத்த கால்இறுதி போட்டிதான்.

    சானியா-போபண்ணா ஜோடி கால் இறுதியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே- வாட்சன் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் சானியா ஜோடிக்கு கடும் சவாலாக இருக்கும்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளம் இன்று தொடங்குகிறது.
    ரியோ டி ஜெனீரோ :

    31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயங்களில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டு பதக்க வேட்டை நடத்தின. டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கோல்ப் உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தடகள போட்டிகள் இன்று தொடங்குகிறது. ரியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் மொத்தம் 47 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதில் பெண்களுக்கு 23 பந்தயங்களும், ஆண்களுக்கு 24 பந்தயங்களும் அடங்கும். மின்னல்வேக வீரர் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசேன்போல்ட்டின் ஓட்டத்தை காண ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள். உலகின் அதிவேக வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று நாளையும், அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி நாளை மறுதினமும் அரங்கேறுகின்றன.

    இந்தியாவை பொறுத்தவரை தடகளத்தில் 34 பேருடன் குதிக்கிறது. காமன்வெல்த் சாம்பியனான வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா தொடர்ந்து 4-வது முறையாக அடியெடுத்து வைக்கிறார். ஒலிம்பிக் தடகளத்தில் அதிக முறை பங்கேற்கும் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இறுதிசுற்று வரை வந்த 33 வயதான விகாஸ் கவுடா நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார்.

    தடகளத்தில் இந்தியாவின் பங்களிப்பு இதுவரை மெச்சும்படி இருந்ததில்லை. 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தய வீரர் நார்மன் பிரிட்சார்ட் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியா சார்பில் கலந்து கொண்டாலும் உண்மையில் அவர் இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்டவர். அதன் பிறகு ஒரு நூற்றாண்டு காலம் உருண்டோடி விட்டது. ஆனாலும் இந்திய வீரர், வீராங்கனைகள் தடகளத்தில் இன்னும் பதக்கத்தை நெருங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

    விகாஸ் கவுடாவை தவிர்த்து, டுட்டீ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), ஸ்ரபானி நந்தா (200 மீட்டர் ஓட்டம்), டின்டு லூக்கா (800 மீட்டர் ஓட்டம்) ஆகிய இந்திய வீராங்கனைகளும் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
    ×