என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: ரியோ ஒலிம்பிக் ரசிகர்களிடம் பட்டப்பகலிலேயே திருடும் உள்ளூர்வாசிகள்
    X

    வீடியோ: ரியோ ஒலிம்பிக் ரசிகர்களிடம் பட்டப்பகலிலேயே திருடும் உள்ளூர்வாசிகள்

    பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காணவந்த ரசிகர்களிடம் உள்ளூர்வாசிகள் வெளிப்படையாக திருடும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பிரேசில் நாட்டின் ரியோவில் உலகின் மிகப்பெரிய தொடரான ஒலிம்பிக் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக் தொடரை நடத்த விருப்பப்படும். தன்னுடைய நாட்டிற்கு பெருமையை வந்து சேர்வதுடன், கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வருவதால் பொருளாதார வருமானமும் அதிக அளவில் கிடைக்கும்.

    ஆனால், பிரேசில் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொருளாதார நிலைமை சீராக இல்லை. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாட்டில் மக்கள் வறுமையில் வாடும்போது கோடி கணக்கான பணத்தை செலவழிப்பதா? என போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே ஜிகா வைரசும் மிரட்டியது. பல்வேறு இடையூறுகளுக்கிடையில் ரியோ ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வந்தது. ரியோவில் தெருவோரம் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

    தற்போது ஒலிம்பிக் போட்டியை காணவரும் ரசிகர்களிடம் வறுமையால் வாடும் உள்ளூர்வாசிகள் குறிப்பாக சிறுவர்கள் பகல் இரவு என்று பாராமல் பட்டப்பகலிலேயே சர்வசாதரணமாக திருடிகிறார்கள்.

    சில ரசிகர்கள் அவர்களை தாக்குகிறார்கள். சில ரசிகர்கள் உயிருக்கு பயந்து கேட்டதை கொடுக்கிறார்கள். குறிப்பாக கழுத்தில் கிடக்கும் செயின் மற்றும் கையில் வைத்திருக்கும் செல்போன்களை எளிதாக பறித்துச் செல்கிறார்கள்.

    அந்த வீடியோவை நீங்கள் பார்க்க...


    Next Story
    ×