என் மலர்
புதுச்சேரி

'எங்களுக்கு மட்டும் இல்லை, கடவுளுக்கே எதிரி தி.மு.க.தான்' - பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு
- மக்கள் யாருக்கும் இன்று பாஜகவை தாண்டி வேறு எந்தக் கட்சிமீதும் நம்பிக்கை வரவில்லை.
- எல்லா சலுகைகளும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்ற பாஜக அனைத்து பிரிவுகளின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர், தமிழ்நாடு அனைத்துப் பிரிவுகளின் மாநில அமைப்பாளர் ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேசிய குஷ்பு,
"இந்தியா இன்று பொருளாதாரத்தில் 4வது இடத்தில் உள்ளது என்றால், அதற்கு பிரதமர் மோடிதான் காரணம். மக்கள் அவர்மீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? காலையில் எழுந்தால் ராகுல் காந்தியின் முதல்வேலை இன்று மோடியை எவ்வாறு திட்டுவது? தவறுகள் இல்லையென்றாலும் அவறேக் கூறுவது. வாக்குத்திருட்டு என்று கூறுகிறார். காங்கிரஸ் வெற்றிப் பெற்றால், வாக்குத்திருட்டு இல்லையா? அப்போது மட்டும் ஈவிஎம் சரியாக இருக்கிறதா? கொஞ்சம் வளருங்கள். சின்னக்குழந்தை மாதிரி பேசாதீர்கள். உலகத்தை கவனியுங்கள்.
மக்கள் யாருக்கும் இன்று பாஜகவை தாண்டி வேறு எந்தக் கட்சிமீதும் நம்பிக்கை வரவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை. அடுத்தமுறையும் திமுக வந்துவிடும் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி வரும்? எது கேட்டாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறுவது. எல்லா சலுகைகளும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக பாஜகவின் எதிரி மட்டும் கிடையாது. மக்களின் எதிரி, இந்த நாட்டின் எதிரி, சனாதனத்தின் எதிரி, இந்து மக்களுடைய எதிரி, ஏன் கடவுளுக்கே எதிரி". எனப் பேசியுள்ளார்.






