என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தனியார் மருத்துவகல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது.
    • எளிதாக கல்வி கொடுக்கும் மாநிலமாக புதுவை எப்போதும் திகழும்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் காந்தி திடலில் 3 நாட்கள் உயர் கல்வி கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

     மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலாளர்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

    புதுவையில் 12-ம் வகுப்பு படித்தவர்களில் பலருக்கும் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளில் இடம் கிடைத்துவிடும். இதற்காக நகரம், கிராமங்களில் பல கல்லூரிகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

    12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அரசு கல்லூரிகளில் சுலபமாக இடம் கிடைத்துவிடும். மதிப்பெண் குறைவாக எடுப்பவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கின்றனர். புதுவை மட்டுமின்றி தமிழ்நாடு, வெளிநாடு களிலும் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த விபரங்களை கண்காட்சியில் பெறலாம். மாணவர்கள் விரும்பும் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு தொடங்கப்படும். தனியார் மருத்துவகல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது.

    இதனால் புதுவை மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்க முடியம். எளிதாக கல்வி கொடுக்கும் மாநிலமாக புதுவை எப்போதும் திகழும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவில் சபாநாயகர் செல்வம், துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் மாணிக்கதீபன், துணை ஆணையர் ராகினி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு அதிகாரி மேரிஜோசப்பின்சித்ரா நன்றி கூறினார். நாளை 21-ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.

    • பெற்றோர் - மாணவர்கள் எதிர்பார்ப்பு
    • அடிக்கடி சிறிய பராமரிப்பு களின் காரணமாக வெளித் தோற்றம் பொலிவுடன் இருந்தாலும், உட்புறம் மிகவும் பலவீனமாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ஆரோக்கிய அன்னை ஆலயம் எதிரே அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் அரியாங்குப்பம், வீராம் பட்டினம், சின்ன வீராம்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் 1925-ம் ஆண்டு கட்டப்பட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பள்ளி நூற்றாண்டு விழா காண உள்ளது.

     இந்த பள்ளியில் படித்த பலர் அரசு துறைகளிலும், முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். பெருமைமிக்க பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆனால் நூற்றாண்டு விழா காண உள்ள பள்ளியின் கட்டிட நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அடிக்கடி சிறிய பராமரிப்புகளின் காரணமாக வெளித் தோற்றம் பொலிவுடன் இருந்தாலும், உட்புறம் மிகவும் பலவீனமாக உள்ளது. பள்ளியின் முக்கிய தூண்கள் பலமிழந்துள்ளது.

    பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகளின் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே சிறுவர் சீர்திருத்த பள்ளி இருந்தது. இது காலாப்பட்டு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதால் சிறுவர் சீர்திருத்த பள்ளி வாரம் ஒரு நாள் வழக்கு விசாரணைக்கு மட்டுமே திறக்கப்படுகிறது.

    அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, சிறுவர் சீர்திருத்த பள்ளி இரண்டை யும் இணைத்து புதுப்பொலி வுடன் அரசு உயர்நிலைப்பள்ளி கட்ட வேண்டும். நூற்றாண்டுக்கு முன்பாக புதிய அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை கட்டி முடித்து திறக்க வேண்டும்.

    இந்த பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு நிகராக சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்றித்தர வேண்டும் என பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள், அப்பகு தியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பாஸ்கர் எம்.எல்.ஏவையும் பொதுமக்கள் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    கல்வித்துறை அதிகாரிகளும், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் பாரம்பரியமான, புக ழ்பெற்ற அரியாங்குப்பம் உயர்நிலைப் பள்ளியை புதுப்பித்து கட்டி, நூற்றாண்டு விழாவை கொண்டாட நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம்பெருமான் பதிவாளரிடம் புகார் தெரிவித்தார்.
    • நான் ஏலச்சீட்டு நடத்தி வந்தேன். அதில் வந்த பணத்தை செலவு செய்துவிட்டேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு கிராமத்தில் கொம்பாக்கம் விவசாய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.

    இங்கு விவசாயத்திற்கு குறைந்த வட்டியில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்று பகுதியில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

    இங்கு மேலாளராக பணியாற்றுபவர் கதிரவன். இவரிடம் வந்த வாடிக்கையாளர் சிலர் தாங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த போது நகைகளை தராமல் அலைக்கழித்துள்ளார். இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம்பெருமான் பதிவாளரிடம் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமை யில் இந்திரமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ்குமார் ஆகியோர் அடங்கிய 5 பேர் குழு சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளர் கதிரவனிடம் பாதுகாப்பு பெட்டக சாவியை வாங்கி, திறந்து ஆய்வு செய்தது.

    மதப்பீட்டுக்குழு நடத்திய ஆய்வில் 588 கிராம் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கூட்டுறவு சங்க தலைவர் புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீ சார் வழக்குப்பதிந்தனர். இன்ஸ்பெக்டர் கலைசெல்வம், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கதிரவன் நகைகளை திருடி, அவரின் நண்பர் ராஜேஷ்குமாரிடம் கொடுத்ததும், அவர் நகைகளை வேறு கடைகளில் அடமானம் வைத்து அந்த பணத்தை செலவு செய்ததும தெரிய வந்தது. இதையடுத்து கதிரவன், ராஜேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கதிரவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஏலச்சீட்டு நடத்தி வந்தேன். அதில் வந்த பணத்தை செலவு செய்துவிட்டேன். ஏலச்சீட்டு போட்டவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்கியிலிருந்த நகைகளை எடுத்த வெளியில் அதிகவிலைக்கு அடகு வைத்து அந்த பணத்தில் ஏலச்சீட்டு பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்களுக்கு சிறிது சிறிதாக கொடுத்துவந்தேன்.

    மீதி பணத்தில் நானும், நண்பர் ராஜேஷ்குமாரும் ஜாலியாக செலவிட்டு வந்தோம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் நகைகளை அடகு வைத்த இடங்களில் இருந்து நகைகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தம் மீது பல்வேறு கொலை வழக்குகள் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது.
    • வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் கோப்புகளை தயாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கடந்த மார்ச் 26-ம் தேதி வெடிகுண்டு வீசியும் அறிவாளர்கள் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தனியார் பேக்கரி கடையில் நின்றிருந்த அவரை பிரபல ரவுடி நித்தியானந்தம் தலைமையிலான கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவத்தை வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கோர்ட்டில் சரண்யடைந்த நித்தியானந்தம் கொம்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த சங்கர் என்கிற சிவசங்கர், கோர்க்காடு ஏரிக்கரை வீதி கார்த்தி என்கிற கார்த்திகேயன் (வயது 23), அரியாங்குப்பம் தீர்த்தக்குளம் வீதி மாஞ்சாலை சேது என்கிற விக்னேஷ் (வயது 26), கடலூர் கிளிஞ்சிகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரதாப் (வயது 24), கோர்க்காடு அய்யனார் கோயில் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜா (வயது 23), தனத்துமேடு காமராஜர் வீதியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 25) மற்றும் ஏழு பேர் இன மொத்த 14 பேர் இந்த வழக்கில் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது செந்தில்குமரன் கொலை வழக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகளால் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செந்தில்குமரன் கொலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தம் மீது பல்வேறு கொலை வழக்குகள் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது.

    இதேபோல் சிறையில் உள்ள நித்தியானந்தத்தின் கூட்டாளிகள் பலர் மீதும் கொடிய குற்றங்கள் புரிந்ததற்கான காவல்துறை பதிவுகள் உள்ளது. இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் கோப்புகளை தயாரித்து வருகின்றனர்.

    • குடிநீர் விநியோகத்தில் போதிய அழுத்தம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போக்குவதற்கு கம்பிரசர் மூலம் உந்தப்பட்டு குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அன்னை நகரில் 4 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவிடம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் அளித்தனர்.

    உடனடியாக அன்னை நகருக்கு பொது பணிதுறை அதிகாரிகளுடன் நேரில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்குரிய வழிமுறைகளை ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் விநியோகத்தில் போதிய அழுத்தம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை போக்குவதற்கு கம்பிரசர் மூலம் உந்தப்பட்டு குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் குடிநீர் தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படாதவாறு ஆழ்துளை கிணறு அமைக்கவும் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை வழங்கினார்.

    • மாணவர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனர்.
    • சமூக அறிவியலில் 1 மாணவர் 100 மதிப்பெண் பெற்றனர்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.  புதுவை புனிதபேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 246 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 99.59 சதவீத தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது.

    500 மதிப்பெண்களுக்கு 491 மதிப்பெண்கள் பெற்று இலக்கியா என்ற மாணவியும் ஈசாக் என்ற மாணவனும் பள்ளியில் முதலிடம் பெற்றார். 490 மதிப்பெண் பெற்று மாணவி அனுஷ்ரி 2-ம் இடத்தையும், 489 மதிப்பெண் பெற்று மாணவி குருப்ரியா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பள்ளியில் தேர்வு எழுதிய 246 மாணவர்களில் 197 மாணவர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனர்.

    தமிழில் 3 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர். இந்தியில் 2 மாணவர்கள் 92 மதிப்பெண் பெற்றனர்.

    பிரெஞ்சில் 3 மாணவர்கள் 98 மதிப்பெண் பெற்றனர். ஆங்கிலத்தில் 6 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர். கணிதத்தில் 10 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர். அறிவியலில் 8 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர். சமூக அறிவியலில் 1 மாணவர் 100 மதிப்பெண் பெற்றனர்.

    சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்கு னர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஆலோசனைக் குழு உறுப்பி னர்கள், வகுப்பாசிரியர்கள் முத்துகு மரன், ஆல்மா, பியுலா, செந்தமிழ் செல்வி, சோபியா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பயிற்சிகாலத்தில் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.
    • மாணவர்களுக்கு சிறப்பு தொழில் வழிகாட்டுதல் தன்னம்பிக்கை ஏற்படுத்துதல், போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளித்தல் நடக்கிறது.

    புதுச்சேரி:

    தேசிய வாழ்வாதார சேவை மைய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் புதுவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்த வர்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் அமைத்து அதன் மூலம் படித்த வேலையற்ற எஸ்.சி, எஸ்.டி சமூக மாணவர்களுக்கு சிறப்பு தொழில் வழிகாட்டுதல் தன்னம் பிக்கை ஏற்படுத்துதல், போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளித்தல் நடக்கிறது.

    அரசு வேலைவாய்ப்பு பெற ஓராண்டு கால போட்டித்தேர்வு பயிற்சி, சுருக்கெழுத்தர் பயிற்சிகள் திறன் வாய்ந்த தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. வரும் 1-ந் தேதி பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. பயிற்சிகாலத்தில் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.

    மேலும் போட்டித் தேர்வுக்கான எழுது பொருட்கள் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 27 வயதுக்குட்பட்ட புதுவையை சேர்ந்த பிளஸ்-2 முடித்தவர்கள் சுய விபரங்களை வரும் 31-ந் தேதிக்குள் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார மையம், 2-ம் தளம், கனரா வங்கி, ரெட்டியபார்பாளையம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மின்துறை என்ஜினீயரிடம் தி.மு.க. மனு
    • மின் மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கோபால் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மின்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

     உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டுக்குட்பட்ட இந்திராகாந்தி நகர், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் ஏற்பட்ட மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை அறிந்த அப்போதைய

    எம்.எல்.ஏ. சிவா குறைந்த மின்னழுத்தத்தை போக்க ராஜீவ்காந்தி நகரில் புதிய மின்மாற்றியை அமைத்தார்.

    பின்னர், ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக புதிய மின்மாற்றி இயக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. எந்த நோக்கத்திற்கு அங்கு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் மக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

     தற்போது கோடைகாலம் என்பதால் அதிகளவு குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஆகவே, மின் தேவையை கருத்தில் கொண்டு புதியதாக அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராமல் இருக்கும் மின் மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

     மனுவை பெற்று கொண்ட கண்காணிப்பு என்ஜினீயர் ஸ்ரீதர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, தி.மு.க. அவைத்தலைவர் ஆதிநாராயணன், மாணவர் அணி அமைப்பாளர் மணி மாறன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு , தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், வீரய்யன், ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், சரவணன், முருகன், மூர்த்தி, பாக்கியராஜ், கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அரியாங்குப்பத்திலும் தவளக் குப்பத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளது.
    • 6 பேருக்கு குண்டாஸ் வழக்குகள் போட போலீசார் ஏற்பாடுகள் நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை ஒட்டிய அரியாங்குப்பம் பகுதி வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராமங்கள் இருந்து வருகிறது புதுச்சேரியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதால் பல கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது.

     வளர்ந்து வரும் நகரமாக மாறி வரும் அரியாங் குப்பத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவம், மோசடிகளும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. கடந்த 4 மாதத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் அரியாங்குப்பத்திலும் தவளக் குப்பத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளது.

    இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிறுய வயதிலேயே கஞ்சா, போதை பழக்கத்திற்கு அடிமையாகி பல குற்றச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க சமூக ஆர்வலர்களும் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

    அரியாங்குப்பம் பகுதியில் ரவுடி மற்றும் குற்றச்செயலில் 67 பேரும் தவளக்குப்பத்தில் 29 பேரும் இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் திருட்டு, வழிபறி, பொதுமக்களுக்கு இடையூறு வகிக்கும் குற்றவாளிகளுக்கு சொத்து பத்திரம், மற்றும் ரொக்கப் பணம் செலுத்தி நன்னடத்தை இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலை வழக்கு, ரவுடிகளை ஊருக்குள் நுழைய தடை மற்றும் 6 பேருக்கு குண்டாஸ் வழக்குகள் போட போலீசார் ஏற்பாடுகள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் பரிந்து ரையின் பேரில் பல்வேறு வழிக்குகளில் சம்பந்தப்பட்ட அரியாங்குப்பம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி குணா என்கிற குணசீலன் (28), அரியாங்குப்பம் மாஞ்சாலை, அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (28), சுப்பையா நகர் பகத்சிங் வீதியை சேர்ந்த கதிர் என்கிற கதிர்வேல் (29) என்பவர்கள் மீது வடக்கு மாவட்ட துணை கலெக்டர் உத்தரவின் பேரில் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து உள்ளார்.

    • புதிதாக தீமிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.
    • போஸ்டரை ஓட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

     இந்த நிலையில் கோவிலுக்கென தனி அதிகாரி இல்லாமல் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் புதியதாக அறங்காவலர் குழுவை தேர்ந்தெடுக்க கூடாது என்று நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறித்து இருந்தது.

    இந்த நிலையில் பழமை வாய்ந்த பாகூர் நவ தேவஸ்தான கோவிலான திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்து அறநிலைத்துறை அறங்காவல் குழு உடன் புதிதாக தீமிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.

    இந்த குழு வரும் 24-ம் தேதி கொடியேற்றத்தில் இருந்து ஜூன் மாதம் 18-ம் தேதி வரை அதிகாரம் இருக்குமென அறிவுறுத்தியுள்ளது.

     இந்த நிலையில் இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியின் போது யாருக்கு அதிகாரம் உள்ளது என இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் எதிராகவும், ஊழல் செய்து இருப்பதாகவும் சர்வே நம்பரை சுட்டிக்காட்டி அவரது சொந்த ஊரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஓட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரகளையில் ஈடுபட்ட வரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
    • பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே சோரியாங்குப்பம் அய்யனார் கோவில் அருகே  ஒருவர் பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட வரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த புஷ்பராஜ் வயது 43) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பொறையூர் பேட் புது நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி கோமளா. இவர்களது மூத்த மகள் தவப்பிரியா 14 இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த தவப்பிரியா தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை வெங்கடேசன் கண்டித்தாக தெரிகிறது. இதனால் தவப்பிரியா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

     வெங்கடேசன் வெளியே சென்று விட்டார். அவரது மனைவி கோமளா மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது வீட்டில் தனியக இருந்த தவப்பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.

    சிறிது நேரம் கழித்து பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கோமளா மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தவப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×