search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செயல்பாட்டிற்கு வராத மின்மாற்றியை இயக்க வேண்டும்
    X

    தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் மின்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர்.

    செயல்பாட்டிற்கு வராத மின்மாற்றியை இயக்க வேண்டும்

    • மின்துறை என்ஜினீயரிடம் தி.மு.க. மனு
    • மின் மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கோபால் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மின்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டுக்குட்பட்ட இந்திராகாந்தி நகர், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் ஏற்பட்ட மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை அறிந்த அப்போதைய

    எம்.எல்.ஏ. சிவா குறைந்த மின்னழுத்தத்தை போக்க ராஜீவ்காந்தி நகரில் புதிய மின்மாற்றியை அமைத்தார்.

    பின்னர், ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக புதிய மின்மாற்றி இயக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. எந்த நோக்கத்திற்கு அங்கு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் மக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது கோடைகாலம் என்பதால் அதிகளவு குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஆகவே, மின் தேவையை கருத்தில் கொண்டு புதியதாக அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராமல் இருக்கும் மின் மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கண்காணிப்பு என்ஜினீயர் ஸ்ரீதர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, தி.மு.க. அவைத்தலைவர் ஆதிநாராயணன், மாணவர் அணி அமைப்பாளர் மணி மாறன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு , தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், வீரய்யன், ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், சரவணன், முருகன், மூர்த்தி, பாக்கியராஜ், கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×