search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரியாங்குப்பம் அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
    X

    அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியின் முகப்பு தோற்றம்.

    அரியாங்குப்பம் அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

    • பெற்றோர் - மாணவர்கள் எதிர்பார்ப்பு
    • அடிக்கடி சிறிய பராமரிப்பு களின் காரணமாக வெளித் தோற்றம் பொலிவுடன் இருந்தாலும், உட்புறம் மிகவும் பலவீனமாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ஆரோக்கிய அன்னை ஆலயம் எதிரே அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் அரியாங்குப்பம், வீராம் பட்டினம், சின்ன வீராம்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் 1925-ம் ஆண்டு கட்டப்பட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பள்ளி நூற்றாண்டு விழா காண உள்ளது.

    இந்த பள்ளியில் படித்த பலர் அரசு துறைகளிலும், முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். பெருமைமிக்க பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆனால் நூற்றாண்டு விழா காண உள்ள பள்ளியின் கட்டிட நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அடிக்கடி சிறிய பராமரிப்புகளின் காரணமாக வெளித் தோற்றம் பொலிவுடன் இருந்தாலும், உட்புறம் மிகவும் பலவீனமாக உள்ளது. பள்ளியின் முக்கிய தூண்கள் பலமிழந்துள்ளது.

    பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகளின் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே சிறுவர் சீர்திருத்த பள்ளி இருந்தது. இது காலாப்பட்டு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதால் சிறுவர் சீர்திருத்த பள்ளி வாரம் ஒரு நாள் வழக்கு விசாரணைக்கு மட்டுமே திறக்கப்படுகிறது.

    அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, சிறுவர் சீர்திருத்த பள்ளி இரண்டை யும் இணைத்து புதுப்பொலி வுடன் அரசு உயர்நிலைப்பள்ளி கட்ட வேண்டும். நூற்றாண்டுக்கு முன்பாக புதிய அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை கட்டி முடித்து திறக்க வேண்டும்.

    இந்த பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு நிகராக சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்றித்தர வேண்டும் என பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள், அப்பகு தியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பாஸ்கர் எம்.எல்.ஏவையும் பொதுமக்கள் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    கல்வித்துறை அதிகாரிகளும், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் பாரம்பரியமான, புக ழ்பெற்ற அரியாங்குப்பம் உயர்நிலைப் பள்ளியை புதுப்பித்து கட்டி, நூற்றாண்டு விழாவை கொண்டாட நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×