என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: சளிக்கு சிகிச்சை பெற வந்த 5 வயது சிறுவனை சிகரெட்  பிடிக்க வைத்த உ.பி. மருத்துவர்
    X

    VIDEO: சளிக்கு சிகிச்சை பெற வந்த 5 வயது சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்த உ.பி. மருத்துவர்

    • அந்த சிகரெட்டை டாக்டர் பற்ற வைக்கிறார்.
    • டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்.

    உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஜலான் நகரில் சளி பிடித்ததால் 5 வயது சிறுவன் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவர் சுரேஷ் சந்திரா, சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி சிகரெட் பிடிக்க வைத்துள்ளார்.

    சிகெரட்டை சிறுவனிடம் கொடுத்து அவனின் வாயில் வைக்க சொல்லி, அந்த சிகரெட்டை டாக்டர் பற்ற வைக்கிறார். பின் டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

    இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×