என் மலர்
இந்தியா
Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்
- ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
- இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.
அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Live Updates
- 1 Feb 2026 12:12 PM IST
வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை கிடையாது. வருமான வரி கணக்கு, மறு ஆய்வுக்கு பிறகும் ரிட்டர்ன் தொடர்பாக மறுமுறை விண்ணப்பிக்கலாம். வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 1 Feb 2026 12:06 PM IST
வருமான வரி சார்ந்த தரவுகளை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
- 1 Feb 2026 12:04 PM IST
மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது. மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக குறைப்பு. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்!
-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 1 Feb 2026 12:00 PM IST
நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதி நிறைவேற்றம். மாநிலங்களுக்கான மானியமாக ரூ. 1.4 லட்சம் கோடி அளிக்கப்படும். புதிய வருமான வரி சட்டம் வருகிற ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது!
- 1 Feb 2026 11:58 AM IST
2 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். வறுமையில் உள்ள மக்களுக்கான சிகிச்சை வசதிகள் 50% அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
- 1 Feb 2026 11:55 AM IST
சிறு விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏஐ கருவி. சந்தனம், தேங்காய், முந்திரி உயர்ரக பயிர் விவசாயிகளுக்கு உதவி. அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
- 1 Feb 2026 11:50 AM IST
பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும். அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள், பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 1 Feb 2026 11:48 AM IST
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் மலை ரெயில் சேவை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு










