search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்போம்- திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
    X

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாய்

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்போம்- திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது என சுதிப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.
    • ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும் என அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் இதுபற்றி கூறுகையில், "மே 28ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்திலோ அல்லது குடியரசு தினத்திலோ அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ இந்த விழா நடந்திருக்க வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது" என்றார்.

    பாராளுமன்றம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, பழைய மரபுகள், முன்னுதாரணங்கள் மற்றும் ஜனநாயக அடித்தளம் ஆகியவற்றை கொண்டு நிறுவப்பட்டது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறினார்.

    Next Story
    ×