என் மலர்
இந்தியா

தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற 3 டெலிவரி ஊழியர்கள் - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
- சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).
கடந்த ஜனவரி 3 இரவு, டெல்லியின் மிகவும் நெரிசலான பகுதியான Connaught Place-இல் சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டுகளால் சிவம் குப்தாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 16 நாட்கள் உயிருக்குப் போராடிய சிவோம் குப்தா, சிகிச்சை பலனின்றி ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.






