என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை - பொங்கலுக்காக அல்ல... அப்போ வேற என்ன காரணம்?
    X

    நாளை இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை - பொங்கலுக்காக அல்ல... அப்போ வேற என்ன காரணம்?

    • வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று பங்கு சந்தை செயல்படும்
    • நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், நாளை மும்பை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று செயல்படும் பங்கு சந்தைக்கு இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலால் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×