என் மலர்
இந்தியா

ஆசிரியரின் ஆணுறுப்பை துண்டித்து வாயில் திணித்த கொடூரம்.. மேற்கு வங்கத்தில் பயங்கரம்
- லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது
- லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.
மேற்கு சிங்கத்தில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் [Alipurduar] நகரில் உள்ள ஜெய்கான் [Jaigaon] பகுதியில் நேற்று முன்தினம் இந்த கொடூர நிலைக்கு ஆளாக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்த உடல் அப்பகுதியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த சாந்தாபீர் லாமா [Santabir Lama] என்பவருடையது என்று தெரியவந்துள்ளது. தல்சிங்பாரா [Dalsingpara] பகுதியைச் சேர்ந்த லாமா சில வருடங்கள் முன்னர் ஜெய்கான் பகுதியில் வந்து குடியேறி ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள உள்ளூர் தேவாலயத்திலும் இயங்கி வந்துள்ளார். இந்நிலையில் லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட லாமாவின் உடல் அலிபூர்துவார் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.






