search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

    • இரண்டு முறை பாரதிய ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடித்த நிலையில், 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம்.
    • இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகள் அளித்துள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதியை அறிவித்து, வாக்குப்பதிவுக்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது.

    இன்று (நவம்பர் 30-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நேற்று காலையில் இருந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இன்று காலை வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா? என பரிசோதித்து பார்க்கப்பட்டன. பின்னர், வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இந்தநிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள். 119 தொகுதிகளில் 2290 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகும்.

    3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 106 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வாக்கப்பதிவு நடைபெறும். ஆயுதம் தாங்கிய குழுவால் பாதிக்கப்பட்டுள்ள 13 தொகுதிகளில் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    3.26 வாக்காளர்களில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள். 1,63,02,261 பெண் வாக்காளர்கள் ஆவார்கள்.

    முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி. சஞ்சய் குமார் மற்றும் டி. அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதி அறிக்கப்பட்டதில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தது.

    பிஆர்எஸ் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா 111 தொகுதிகளிலும், கவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துள்ளது. காங்கிரஸ் சிபிஐ-க்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்து 118 இடத்தில் போட்டியிடுகிறது.

    2.5 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×