என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் பா.ஜ.க.
    X

    பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் பா.ஜ.க.

    • தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும்.
    • தமிழகத்தில் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு பாஜகவை பலப்படுத்தி வருகிறார்.

    டெல்லி:

    டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி இணைந்தார்.

    அதன்பின் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜகவில் இணைந்த சகோதரி விஜயதாரணியை வரவேற்கிறேன் என்றார்.

    இதன்பின்னர் பேசிய விஜயதாரணி,

    * பல வருடங்களாக தேசிய கட்சியான காங்கிரசில் இருந்தேன். தற்போது மீண்டும் ஒரு தேசிய கட்சியில் இணைந்துள்ளேன்.

    * மோடி தலைமையிலான அரசு பல சாதனைகளை செய்து வருகிறது.

    * அரசின் திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைவதில்லை.

    * தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும்.

    * தமிழகத்தில் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு பாஜகவை பலப்படுத்தி வருகிறார்.

    * மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது.

    * பெண்களுக்கு பாஜக தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது என்றார்.

    Next Story
    ×