என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு- ராகுல் நாளை மணிப்பூர் செல்கிறார்
ByMaalaimalar28 Jun 2023 5:01 AM GMT (Updated: 28 Jun 2023 5:17 AM GMT)
- 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.
- நாளை மற்றும் 30-ந்தேதிகளில் மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
புதுடெல்லி:
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.
இந்த நிலையில் அந்த கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
நாளை மற்றும் 30-ந்தேதிகளில் மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கி உள்ளவர்களை சந்திக்கும் ராகுல், அம்பால் மற்றும் சுராசந்த்பூரில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×