search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு- பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்
    X

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு- பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்

    • ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து, கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வந்தனர்.
    • பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 1 நிமிடத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள். அறிவித்து இருந்தனர்.

    அதன்படி, ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து, கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து பாராளுமன்றத்தில் இருஅவைகளும் தொடங்கியது. ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 1 நிமிடத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக திரிணாமுல் காங்கிரசும் பங்கேற்றுள்ளது.

    Next Story
    ×