search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க-தெலுங்கு தேசம் மீண்டும் பேச்சு வார்த்தை
    X

    பா.ஜ.க-தெலுங்கு தேசம் மீண்டும் பேச்சு வார்த்தை

    • கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    • கூட்டணி அமைந்தால் 3 கட்சிகளும் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

    ஆனால் தொகுதி உடன்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் 99 வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் அறிவித்தது.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் பா.ஜ.க மாநிலத்தில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவானது. அந்த கட்சியில் 2000 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்றனர். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது ஜே .பி. நட்டா உடனிருந்தார்.


    ஆந்திர மாநிலத்தில் திருப்பதி உள்பட 6 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் 4 இடங்களை மட்டுமே தர முடியும் என சந்திரபாபு நாயுடு உறுதியாக இருந்தார்.

    இறுதியாக பா.ஜ.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதி ஒதுக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். ஆனால் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இதனால் நேற்று இரவு நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இன்று மீண்டும் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணி இணைவது உறுதியாகி உள்ளது.

    கூட்டணி அமைந்தால் 3 கட்சிகளும் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது. திருப்பதி அல்லது அமராவதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அதில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×