search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா ஆண்டு விழாவிற்கு சோனியா காந்தியை அழைத்ததற்கு பா.ஜ.க. எதிர்ப்பு
    X

    தெலுங்கானா ஆண்டு விழாவிற்கு சோனியா காந்தியை அழைத்ததற்கு பா.ஜ.க. எதிர்ப்பு

    • மாநில அந்தஸ்து கொண்டாட்டங்களுக்கு அதிக பணம் செலவழித்து, கடன் வாங்கும் முன் காங்கிரஸ் அரசு தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் செயல்படுத்த வேண்டும்.
    • தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு பா.ஜ.க எப்போதும் ஆதரவளித்து வந்தது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் உருவான 10-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்து உள்ளது. இதனால் ஆண்டு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

    இது குறித்து தெலுங்கானா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சுபாஷ் கூறியதாவது :-

    எந்த தகுதியின் அடிப்படையில் ஆண்டு விழாவிற்கு சோனியா காந்தியை அழைத்து இருக்கிறீர்கள். தெலுங்கானா மக்களால் மாநில அந்தஸ்தை அடைந்தபோது காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிகள் தங்களால் தான் மாநில அந்தஸ்து கிடைத்ததாக பொய் கூறுகின்றனர்.

    மாநில அந்தஸ்து கொண்டாட்டங்களுக்கு அதிக பணம் செலவழித்து, கடன் வாங்கும் முன் காங்கிரஸ் அரசு தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் செயல்படுத்த வேண்டும். பி.ஆர்.எஸ் அரசு கடந்த காலங்களில் மாநிலத்தில் மக்கள் துயரத்தில் இருந்த போதும் கொண்டாட்டங்களுக்காக ரூ.500 கோடியை செலவழித்தது.

    தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு பா.ஜ.க எப்போதும் ஆதரவளித்து வந்தது. மறைந்த சுஷ்மா சிவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய கட்சித் தலைவர்கள் இதற்கு ஆதரவு அளித்து வந்தனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×